April 21, 2025, 4:20 PM
34.3 C
Chennai

இந்திய வம்சாவளி பெண்ணிற்கு ஆப்பிள் நிறுவனம் பரிசு!

abinaiya
abinaiya

இந்த ஆண்டு “Swift Student Challenge” போட்டியில் வென்ற 350 வெற்றியாளர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபினயா தினேஷ் எனும் 15 வயதான சிறுமியும் ஒருவர் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த “Swift Student Challenge” போட்டி என்பது ஆப்பிளின் வருடாந்திர WWDC இன் ஒரு பகுதியாகும். இந்த போட்டியில் குழந்தைகள் தங்கள் coding திறனை வெளிப்படுத்தி பரிசை வெல்வர்.

ஆப்பிள், தனது செய்தி அறிவிப்பில், 15 வயதான அபிநயா தினேஷ் ‘மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் இணைப்பு’ பிரிவில் எவ்வளவு ஆர்வமாக உள்ளார் என்பதை விவரித்துள்ளது. நியூ ஜெர்சியில் உள்ள நார்த் பிரன்சுவிக் நகரில் வசிக்கும் இவருக்கு கடந்த ஆண்டு pelvic foot disorder எனும் இடுப்பு கால் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது

நான் ஒரு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட்டிடம் (gastroenterologist) சென்றேன், அவர் என்னை இடுப்பு கால் கோளாறு இருப்பதை கண்டறிந்தார், ஆனால் அதிலிருந்து நான் எப்படி குணமடைய முடியும் என்று என்னிடம் எதுவும் சொல்லவில்லை,” என்று அபிநயா கூறினார்.

அதையடுத்து, அபிநயா Gastro at Home என்ற பயன்பாட்டை உருவாக்கினார். இரைப்பை குடல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு அந்நோய் குறித்த தகவல் மற்றும் ஆதாரங்களை அணுகுவதற்கான வழியை இந்த பயன்பாடு வழங்குகிறது, குறிப்பாக மக்கள் பேசுவதற்கு தயங்கும் சில தகவல்களைப் பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் ஆப் ஸ்டோரில் இந்த பயன்பாட்டை வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

ALSO READ:  மதுரை ஆலயங்களில் மஹா சிவராத்திரி; ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

இதோடு மட்டும் நில்லாமல், அபிநயா தனது சொந்த இலாப நோக்கற்ற இம்பாக்ட் AI (Impact AI) என்ற நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார், இது இளைஞர்களிடையே (AI) கற்றல் மற்றும் நெறிமுறை நடைமுறைகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. இம்பாக்ட் AI மூலம், இளம் பெண்களுக்கு coding மற்றும் maching learning அடிப்படைகளை கற்பிப்பதற்காக எட்டு வார உயர்நிலைப்பள்ளி திட்டங்களையும் அவர் தொடங்கினார்.

இது குறித்து அபிநயா கூறுகையில், “எனக்கு கற்பிப்பதில் ஆர்வம் அதிகம். இந்த தொழில்நுட்பம் உள்ளது என்பதையும் மருத்துவம் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய முன்னேற்றங்களுக்கு இவை வழிவகுக்கும் என்பதையும் அடுத்த தலைமுறையினருக்குக் காண்பிப்பது மிகவும் முக்கியமானது.” என்று தெரிவித்தார்.

அபிநயா தனது உயர்நிலைப் பள்ளி பட்டப்படிப்புக்குப் பிறகு மருத்துவம் அல்லது கணினி அறிவியலில் பட்டம் பெற விரும்புவதாகவும் தெரிவித்தார். மருத்துவத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதே அவரது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  மகா சிவராத்திரி; இன்று நிறைவு பெறும் மகா கும்பமேளா! 63 கோடி பேருக்கு மேல் புனித நீராடல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம்

Entertainment News

Popular Categories