
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பெண் உதவியாளரை முத்தமிட்டதாக எழுந்த புகாரையொட்டி இங்கிலாந்து சுகாதார மந்திரி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த புகார் குறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதார துறை மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் மன்னிப்பும் கோரினார்
இங்கிலாந்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்க் விதிமுறைகளை மீறி தனது உதவியாளரை அலுவலகத்தில் வைத்து, கட்டியணைத்து உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தனது உதவியாளருக்கு முத்தம் கொடுத்த காட்சி, சிசிடிவில் பதிவான நிலையில், முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படங்களை அந்நாட்டின் பத்திரிக்கைகள் வெளியிட்டன.
சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் மன்னிப்பும் கோரினார்.
மாட் ஹான்க்கின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாகவும், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
🚨THE VIDEO WITH SOUND🚨
— Dapper Laughs (@dapperlaughs) June 26, 2021
Finally we can hear #matthancock moisturising his secretary 💦😬😳😱#sackmatt #londonprotest #MinorityReport pic.twitter.com/2lLKSf7Rog
இருந்தாலும், இந்த முத்த விவகாரத்தை எதிர்கட்சிகள் விடுவதாக இல்லை. உடனடியாக சுகாதார மந்திரி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தின. எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக தன்னுடைய பதவியை மாட் ஹான்க் ராஜினாமா செய்துள்ளார்.
I have resigned as Health Secretary pic.twitter.com/eyWi1AA19i
— Matt Hancock (@MattHancock) June 26, 2021