
மழை பெய்யும் போது ஆகாயத்திலிருந்து அவ்வப்போது மீன்கள் கூட விழுவதுண்டு. குளங்கள் நதிகள் கடல் மீதாக சுழற்காற்று வீசும்போது நீரிலிருந்து மீன்களையும் அள்ளிக்கொண்டு மேகங்களில் அவற்றை விட்டு செல்வதுண்டு. மழை பெய்யும் போது அந்த மேகங்களில் இருந்து மீன்கள் பூமியின் மீது விழுவதும் உண்டு.
ஆனால் இப்போது நாம் பார்க்கப் போவது வேறு. இந்த வீடியோவில் கூட ஆகாயத்திலிருந்து மீன்கள் கொட்டுகின்றன. இது சுழற்காற்றோ மழையோ செய்த வேலை அல்ல. மனிதர்கள் செய்த நல்ல வேலை.
அமெரிக்காவிலுள்ள உடா (Utah) வைல்ட் லைஃப் ரிசோர்ஸஸ் அந்த நாட்டில் இருக்கும் பல்வேறு ஏரிகள் குளங்களில் விமானங்களின் மூலம் ஆயிரக்கணக்கான மீன்களை மேலிருந்து கொட்டுகின்றன.
அவர்கள் இந்த வீடியோவை அண்மையில் பேஸ்புக் பேஜில் போஸ்ட் செய்துள்ளார்கள். மீன்களை விமானங்களில் லோடு செய்வது அவற்றை விமானத்திலிருந்து ஏரிகளில் கொட்டுவது போன்றவை இந்த வீடியோ மூலம் பார்க்க முடிகிறது.
இந்த வாரம் எங்கள் நாட்டில் சுமார் 200 ஏரிகளில் மீன்களை கொட்டியுள்ளோம். இந்த ஏரிகள் இருக்குமிடத்திற்குச் செல்வதற்கு சாலை மார்க்கம் இல்லாததால் விமானம் மூலம் இந்த வேலையை செய்கிறோம் என்று தெரிவித்து இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்கள்.
ஒரு விமானம் சுமார் 100 பவுண்டுகளுக்கு மேலாக எடை கொண்ட நீரை சுமந்து செல்ல முடியும் என்றும் ஒரே ட்ரிப்பில் 35 ஆயிரம் மீன்களை ஏரிகளில் கொட்டி உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
வைல்ட் லைஃப் ரிசோர்ஸ் ஏஜன்ஸி கூறிய விவரங்களின்படி… உடா நகரத்தில் 1950 லிருந்து இந்த விதமாகவே மீன்களை விடுவித்து வருகிறார்கள். சாலை வசதி இல்லாத இடங்களில் இருக்கும் ஏரிகளிலும் குளங்களிலும் விமானங்கள் மூலம் மீன்களை கொட்டுவது வழக்கம்.
இதன் மூலம் மீன் வளம் அதிகரிக்கும் என்றும் சுற்றுச்சூழல் கூட மேம்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.