விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டும் சீனா!

Published:

sky
sky

சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விண்கலத்தை சுற்றுப்பாதையில் இணைப்பதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த திட்டமானது விண்வெளி ஆய்வை விரிவுப்படுத்துவதற்கான தேசத்தின் லட்சியங்களில் ஒரு பகுதியாகும். இது நீண்ட கால திட்ட செயல்பாடு குழு பயணங்களை உள்ளடக்கியது.

மைல் அளவு நீளமுள்ள விண்கல்
மைல் அளவு நீளமுள்ள ஒரு விண்கலத்தில் உருவாக்க ஆர்வமாக இருப்பதாக சீனா தரப்பில் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக சீனா நீண்ட தூர பயணங்களுக்காக ஒரு மைல் நீளமுள்ள விண்கலத்தை ஆராய்ச்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

rocket 1
rocket 1

இந்த குறிப்பிட்ட முயற்சியானது ஒரு பெரிய மூலோபாய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாகும். எதிர்கால விண்வெளி வளங்களின் பயன்பாடு, பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை நீண்டகால சுற்றுப்பாதையில் இருப்பதை நிறுவனம் உறுதி செய்கிறது.

கணித மற்றும் இயற்பியல் துறை
கணித மற்றும் இயற்பியல் துறையில் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 10 முன்மொழிந்த ஆராய்ச்சி திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 2.3 மில்லியன் டாலர் அளவில் திட்டத்துக்கு செலவிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

கடுமையான சவாலை எதிர்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள்
விண்வெளி அடிப்படையிலான அசிம்பிளி பாகங்கள் தேவைப்படும் எனவும் இது அதிக எடை இருக்கும் எனவும் இதன் காரணமாக இது ஒரே விமானத்தில் ஏவமுடியாத அளவுக்கு மிகப்பெரியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

earth
earth

இதனால் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் கடுமையான சவாலை எதிர்கொள்கின்றனர் என கூறப்படுகிறது. விண்வெளியில் ஏவுவதற்கு ஏதுவாக எடைகளை குறிக்க வேண்டும் மேலும் நாட்டின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கட்டுமான பணிகளை நிறைவு செய்ய வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது.

சர்வதேச ஆய்வு மையம்
சீனாவில் விண்வெளி இலக்குகள் வளர்ந்து வருகின்றன. சீனா உண்மையாகவே அதன் விண்வெளி திட்டத்தை இரட்டிப்பாகத் தொடங்கியது.

மே மாதம் முதல் தங்களின் தீர்வு முடிவை உலகுக்கு நிறுவனம் காட்டத் தொடங்கியுள்ளது. ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை நிர்ணயித்துள்ளன. இதேபோன்று விண்வெளியில் ஒரு தரமான ஆய்வு நிலையத்தை அமைக்கு முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
Space
Space

தியாங்காங் என்ற விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக சீனா தனியாக தியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது.

மேலும் இதன் மையப்பகுதியான ‘தியான்ஹெ’ பெட்டகம் கடந்த ஏப்ரல் 26-ல் ஆட்களே இல்லாமல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்பு விண்வெளி நிலையத்தற்கு தேவைப்படும் எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி ஆடைகள், உணவு பொருள்களுடன் தியான்சோ 2 என்ற சரக்கு விண்கலத்தை சீனா அனுப்பியது. இந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

rocket
rocket

சூரியனை ஒளிர வைக்கும் முயற்சி
மறுபுறம் செயற்கை சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1999ஆம் அண்டு முதல் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் Experimental Advanced Superconducting Tokamak என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

இந்த இயந்திரம் 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையாக தயாராகிவிடும் என்றும் 2050ஆம் ஆண்டு முதல் தொழில் முறையில் இதன் மூலமான சக்தி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img