
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 25 ஆகஸ்டு 2021 முதல் 6 செப்டெம்பர் 2021 வரை ஜப்பானில் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்தியா ஒன்பது வெவ்வேறு விளையாட்டுகளில் கலந்துகொள்ள 54 விரர், வீராங்கனைகளை அனுப்பியுள்ளது. ஆண் வீரர்கள் 40, பெண் வீராங்கனைகள் 14. இவர்கள் வில்வித்தை, தடகளம், இறகுப்பந்தாட்டம், பாராகேநோயிங் எனப்படும் படகுப்போட்டி, பளுதூக்குதல், துப்பாக்கி சுடும் போட்டி, நீச்சல், டேபிள் டென்னிஸ், டெக்வாண்டோ ஆகிய ஒன்பது போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். பாராகேநோயிங் எனப்படும் படகுப்போட்டியில் பிராச்சி யாதவ் எனும் ஒரு பெண் வீராங்கனை கலந்துகொள்கிறார். அவரது போட்டி 2 செப்டெம்பர் அன்று நடைபெருகிறது. இதுவரை இந்தியா 10 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- அவனி லேகரா – பெண்கள் R2 – 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் –– 30 ஆகஸ்டு – தங்கப்பதக்கம்.
- சுமித் அன்டில் – F64 – ஈட்டி எறிதல் – 30 ஆகஸ்டு – தங்கப்பதக்கம்.
- பாவினா படேல் – Class 4 – டேபிள் டென்னிஸ் – 29 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
- நிஷாத் குமார் – T47 – உயரம் தாண்டுதல் – 29 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
- யோகேஷ் கத்துனியா – F56 – வட்டெறிதல் – 30 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
- தேவேந்திர ஜஜாரியா@* – F46 – ஈட்டி எறிதல் – 30 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
- மாரியப்பன் தங்கவேலு# – T63 – உயரம் தாண்டுதல் – 31 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
- சுந்தர் சிங் குர்ஜர் – F46 – ஈட்டி எறிதல் – 30 ஆகஸ்டு – வெண்கலப் பதக்கம். (@வெள்ளி, வெண்கலம் இரண்டு பதக்கங்கள்)
- சிங்கராஜ் அதானா – SH1 – 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் – 31 ஆகஸ்டு – வெண்கலப் பதக்கம்.
- ஷரத் குமார் – T63 – உயரம் தாண்டுதல் – 31 ஆகஸ்டு – வெண்கலப் பதக்கம். (#வெள்ளி, வெண்கலம் இரண்டு பதக்கங்கள்)
• தினேஷ் ப்ரியந்தா ஹிராத் முடியஞ்சீலகே என்ற இலங்கை வீரர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்தார்.