கொழும்பு: இலங்கையின் இறுதிக் கட்டப்போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான போர்க் குற்ற விசாரணைகளுக்கு வெளிநபர்கள் யாரும் தேவையில்லை என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மேலும், இலங்கையின் உள்நாட்டு விசாரணை நடைமுறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அதிபர் சிறிசேன கோரிக்கை விடுத்தார். ஆனால் அதே நேரம், உள்நாட்டு விசாரணையை உறுதியாக மேற்கொள்வதற்கு வசதியாக ஐநாவின் ஆலோசனைகள் ஏற்கப்படும் என்றும் அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளார். இறுதிக் கட்டப்போரில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டும் போர்க்கால குற்றங்களுக்கு சர்வதேச அலவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும் தமிழர் அமைப்புகளும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந் நிலையில், ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கை இம்மாதம் வெளியிடப்படாமல், வரும் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Popular Categories