
உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பனிரெண்டாம் நாள் – 27 அக்டோபர் 2022
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற உலகக் கோப்பை டி20 பொட்டிகளில் மூன்று குரூப் 2 பிரிவு ஆட்டங்கள் நடந்தன. இரண்டு ஆட்டங்கள் சிட்னி மைதானத்திலும் மூன்றாவது ஆட்டம் பெர்த்திலும் நடைபெற்றது.
முதல் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா வங்கதேசம் தென் ஆப்பிரிக்க அணி (205/5, ரோஸ்கோ 109, டி காக் 63, ஷாகிப் அலி ஹசன் 2/33) வங்கதேச அணியை (16.3 ஓவரில் 101 ரன், லிட்டன் தாஸ் 34, சௌம்ய சர்கார் 15, மிராஸ் 11, தஸ்கின் அகமது 10, நார்கே 4/10, ஷம்சி 3/20) 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரரும் அணித்தலைவருமான பவுமா (2 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் டி காக் (38 பந்துகளில் 63 ரன்), ரோஸ்கோ (56 பந்துகளில் 109 ரன்) ஜோடி இணைந்து அணியின் ஸ்கோரை பரபரவென உயர்த்தினர்.
16ஆவது ஓவரின் முடிவில் மூன்று விக்கட் இழப்பிற்கு 180 ரன் என்ற நிலையில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியை அடுத்த இரண்டு ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 205 ரன் என்ற நிலைக்கு கொண்டுவந்தனர் வங்கதேச அணியினர். அடுத்து விளையாட வந்த வங்கதேச அணியினர் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 16.3 ஓவரில் 101 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக அந்த அணியில் இருவர் மட்டுமே 10 ரன்னைத் தாண்ட முடிந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் நார்கே 4 விக்கட்டுகளையும் ரபாடா, கேசவ் மகராஜ் தலா ஒரு விக்கட்டையும் ஷம்சி மூன்று விக்கட்டுகளையும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி 101 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் நெட் ரன்ரேட் கணிசமாக உயர்ந்தது.
இரண்டாவது ஆட்டம் இந்தியா-நெதர்லாந்து இந்திய அணி (179/2, விராட் கோலி 62*, ரோஹித் ஷர்மா 53, சூர்யகுமார் யாதவ் 51*) நெதர்லாந்து அணியை (123/9, பிரிங்லே 20, புவனேஷ் குமார், அர்ஷதீப், அக்சர் படேல், அஷ்வின் தலா இரண்டு விக்கடுகள்) 56 ரன் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கே.எல். ராகுல் மூன்றாவது ஓவரில் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அந்த அவுட்டை ரிவியூ செய்திருந்தால் அவர் அவுட் இல்லை என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் ஏனோ இந்திய அணி ரிவியூ செய்யவில்லை.
அதன் பின்னர் இந்திய அணி ஒரு சாம்பியன் அணி போல விளையாடியது. ரோஹித் ஷர்மா 39 பந்துகளில் 53 ரன் அடித்தார்; ஆரம்பத்தில் மெதுவாக ஆடிய கோலி 44 பந்துகளில் 62 ரன் அடித்தார்; சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 51 ரன் அடித்தார்.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 179 ரன் அடித்தது. அதன் பின்னர் ஆடவந்த நெதர்லாந்து அணிக்கு புவனேஷ்குமார் அபாரமான முதல் இரண்டு ஓவர் வீசினார். அவற்றில் ரன் எதுவும் கொடுக்கவில்லை; ஒரு விக்கட் எடுத்தார். அவர் மொத்தமாக மூன்று ஓவர் வீசி இரண்டு மெய்டன், மூன்று ரன். இரண்டு விக்கட் எடுத்தார்.
அஷ்வின் நாலு ஓவர் வீசி, 21 ரன் கொடுத்து இரண்டு விக்கட் எடுத்தார். அக்சர் படேல் நாலு ஓவர் வீசி 18 ரன் கொடுத்து 2 விக்கட் எடுத்தார். அர்ஷதீப் 18ஆவது ஓவரில் இரண்டு விக்கட் அடுத்தடுத்த பந்துகளில் எடுத்தார். எனவே இந்தியா எளிதில் வென்றது.
மூன்றாவது ஆட்டம் பாகிஸ்தான் ஜிம்பாபே ஜிம்பாபே அணி (130/8, சீன் வில்லியம்ஸ் 31, எர்வின் 19, ஈவான்ஸ் 19, முகம்மது வாசிம் 4/24, ஷாதாப் கான் 3/23) பாகிஸ்தான் அணியை (129/8, ஷான் மசூத் 44, நவாஸ் 22, சிக்கந்தர் ராசா 3/25) ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்று முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது. சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டும், ஷதாப் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் 4 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 15 ரன்னிலும் அவுட்டாகினர்.
இப்திகார் அகமது 5 ரன்னிலும், ஷதாப் கான் 17 ரன்னிலும் அவுட்டாகினர். பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹைதர் அலி டக் அவுட்டானார்.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே திரில் வெற்றியை பதிவு செய்தது.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட் வீழ்த்தினார்.