
ஒட்டு மொத்த உலகிற்கும் இந்தியா அளித்த பரிசு யோகா என ஐ.நா. தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுப்பேசிய போது, பாரதப் பிரதமர் நேரேந்திர மோடி அழுத்தமாகக் கூறினார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்து, இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு, பிரபல தொழிலதிபர்களுடன் சந்திப்பு என, அடுத்தடுத்து தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
நியூயார்க் நகரின் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகோ நிகழ்ச்சியில் 180 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியபோது…
யோகா என்பது வாழ்க்கையின் நெறிமுறை, இந்தியவின் மற்ற பாரம்பரியத்தை போலவே, யோகா சக்திவாய்ந்தது. காப்புரிமைகள் மற்றும் ராயல்டி ஆகியவை இல்லாதது. உங்கள் வயது, பாலினம் மற்றும் உடற்பயிற்சி நிலைக்கு ஏற்றது. அனைத்து இன மதங்களுக்கும் பொதுவானது. ஒட்டு மொத்த உலகிற்கும் இந்தியா அளித்த பரிசு யோகா. அமைதியான உலகம் தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க யோகாவின் சக்தியைப் பயன்படுத்துவோம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இலக்கை நனவாக்க ஒன்றிணைவோம்.” என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஐக்கியநாடுகள் சபை தலைவர் கசபா கொரேஷி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நடிகர் எரிக் ஆடம்ஸ், கிராமி விருது பெற்ற ரிக்கி கெஜ், இந்திய உணவுக்கலை நிபுணர் விகாஸ் கண்ணா, ஜெய் ஷெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஐ.நா .,தலைமையகத்தில் பிரதமர் மோடி பங்குபெற்ற யோகா நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அதிகளவில் பங்கேற்றனர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.