பீஜிங்: சீனாவில் இந்த வாரம் துவங்குகின்ற கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு முக்கிய அரசியல் கூட்டங்களில் அந்நாட்டின் முதல் பத்து பணக்காரர்களில் ஐந்து பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் மிகப் பெரிய பணக்காரர் என்று அண்மையில் தெரிய வந்த சூரிய சக்தி தொழிலதிபர் லீ ஹெஜுன், இந்த ஐந்து பேரில் ஒருவர். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டில் பங்கேற்கவுள்ள லீயின் மொத்த சொத்து மதிப்பு 2600 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் பணக்காரர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தமது தொழில்துறைக்கு சாதகமாக அரசுக் கொள்கைகளை வகுக்க வழி தேடுகின்றனர் என்றும், சீன நாடாளுமன்றமும் தேசிய மக்கள் மன்றமும் இதற்கு துணைபோவதாகவும் அங்கே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சீனாவில் அரசுக் கொள்கை வகுக்கும் குழுவில் பணக்காரர்கள்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari