ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டதில் 16 பேர் உயிரிழப்பு!

australia gun shoot - 2026

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத மதத்தினரின் ‘ ஹனுக்கா’ எனும் பண்டிக்கை கொண்டாட்டம் நடந்த பகுதியில் திடீரெனப் புகுந்த பயங்கரவாதிகள் இருவர் கண்மூடித்தனமாக சுட்டதில், பதினாறு பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளில் ஒருவன் கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் யூத பண்டிகைக்காக, ஞாயிற்றுக் கிழமை மாலை நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது திடீரென அங்கே வந்த இரண்டு பேர் பொதுமக்களைக் குறி வைத்து துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.  இச்சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்ததாக முதல் கட்டத் தகவல் வெளியானது. இதனை போலீசாரும் உறுதி செய்தனர். மேலும் 29 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிகழ்விடத்துக்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவன் கொல்லப்பட்ட நிலையில், மற்றொருவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும் அங்கே அருகே இருந்த கார் ஒன்றின் அருகில் ஐஇடி வகை வெடிகுண்டு கண்டுடெடுக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களே அதைக் கொண்டு வந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய  இருவரில் ஒருவன் நவீத் அக்ரம்(24) என அடையாளம் காணப்பட்டது. அவனது டிரைவிங் லைசென்ஸ் மூலம் போலீசார் அடையாளம் கண்டுபிடித்ததாகக் கூறினர்.  போனிரிக் பகுதியில் உள்ள அவனது வீட்டை கண்டுபிடித்துள்ள போலீசார், அங்கு சோதனை செய்தனர். 

ஆஸ்திரேலிய பிரதமர் அதிர்ச்சி:

இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்ட அறிக்கையில், “போலீசாரும், அவசரகால மீட்புப் படையினரும் மக்களைக் காப்பாற்ற பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். போலீசாருடன் பேசியுள்ளேன். அவர்கள் கூறும் அறிவுரையை மக்கள் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஒருவர் ரத்தம் வழிய நின்றபடி ஒரு வீடியோ பதிவு எடுத்து சமூகத் தளங்களில் பதிவேற்றியுள்ளார். அவர் அளித்த தகவலில், எனக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் கசிகிறது. தாக்குதல் நடந்த போது எனது குடும்பமும் அங்கு இருந்தது. என்ன நடந்தது என தெரிவதற்குள் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து விட்டது. ஆஸ்திரேலியாவில் இதுபோன்று நடக்கும் என நான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இவர், கடந்த 2023 அக்.7ல் இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தப்பியவர்.

பயங்கரவாதியை சுற்றி வளைத்த பழ வியாபாரி

பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூடு நடந்த போது அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடினர். வாகனங்கள், கட்டடங்களுக்குப் பின் பதுங்கினர். போலீஸாரும் செய்வதறியாமல் திணறினர். ஓரிரண்டு பெண் காவலர்கள் தங்கள் கைகளைத் தூக்கி சரண் அடைந்ததையும் சிசிடிவி கேமிராக்கள் காட்டிக் கொடுத்தன. அப்போது, துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பின்புறமாக மெதுவாக ஓடிச் சென்று, அவரை மடக்கிப் பிடித்து, கையைத் தட்டி துப்பாக்கியைப் பறித்த அங்கிருந்த பழ வியாபாரி, அவரை நிலைகுலையச் செய்து, அதுவரை துப்பாக்கியைத் தூக்கியிருக்காத நிலையிலும், பயங்கரவாதியின் துப்பாக்கியைக் கொண்டு அவரை நோக்கிச் சுட்டிருக்கிறார். அப்போது இன்னொரு பயங்கரவாதி பாதசாரிகள் செல்லும் பாலத்தில் இருந்து சுட்டதில் பழ வியாபாரி காயம் அடைந்துள்ளார். 

பாரதப் பிரதமர் மோடி கண்டனம்

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி உடனடியாக தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.  இந்திய மக்கள் சார்பில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், இந்த துயரமான தருணத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் தான் இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக தனது கடும் கண்டனங்களை அறிக்கை வாயிலாக வெளியிட்டார். நியூசிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “மூன்று மாதங்களுக்கு முன்பு , ‘உங்களது கொள்கை, யூத எதிர்ப்பு என்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது’ எனத் தெரிவித்திருந்தேன் . யூத எதிர்ப்புக் கொள்கை என்பது புற்றுநோய் போன்றது. தலைவர்கள் மௌனமாக இருந்து நடவடிக்கை எடுக்காத போது உலகம் முழுவதும் பரவும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

முன்னதாக, ஹமாஸ் – இஸ்ரேல் மோதலின் போது, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஆஸ்திரேலியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

பதினாறு பேர் படுகொலையில் பாகிஸ்தானியர்!

ஆஸ்திரேலியாவில் பதினாறு பேரை சுட்டுக்கொன்ற இருவரும் பாகிஸ்தானியர்களே என்று அங்கே மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்களில் தந்தை பெயர் சஜித் அக்ரம். மகன் பெயர் நவீத் அக்ரம் (24). போலீஸ் சுட்டதில் தந்தை உயிரிழந்துள்ளார். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் பாகிஸ்தானில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்துள்ளனர். எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது

இந்நிலையில், பாகிஸ்தான் குறித்து இந்தியா கூறிவரும் குற்றச்சாட்டு மீண்டும் உண்மையாகியுள்ளது.   எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் தாயகமாக பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறது . உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் பயங்கரவாத சம்பவங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுவது தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது. இதற்கு, பாகிஸ்தான் அரசும், ராணுவமும் நேரடியாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதே முக்கியக் காரணம். மேலும், நன்கு படித்த நவீத் அக்ரம் போன்றோர் இப்படி துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயங்கரவாதச் செயகளில் ஈடுபடுவது பாகிஸ்தானின் வொய்ட்காலர் டெரரிஸம் குறித்து இந்தியா குறிப்பிடுவதை உண்மையாக்கி இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories