
இலங்கைக்கு இந்தியாவில் இருந்து சில ஏஜெண்டுகள் பல காலமாகவே சென்று வருகிறார்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கம் ஒன்றுதான் அவர்களுக்கு. அதற்காக, உறவுகளை இழந்து கண்ணீர் வடிக்கும் மக்களிடமும் ஆறுதல் சொல்வதாக கைநீட்டிக் கொண்டிருப்பார்கள்.
இதுவரை மறைமுகமாக இவர்களை அரசியல் போர்வையில் களம் இறக்கி, இலங்கையின் சிவ வழிபாட்டு, முருக வழிபாட்டு அம்சங்களை சிதைத்து வந்த கிறிஸ்துவ சர்ச்சுகளின் ஏஜெண்டுகள், இப்போது நேரடியாகவே தங்களது மதமாற்ற ஏஜெண்டுகளை களம் இறக்கி விட்டுள்ளதாகக் கூறுகின்றனர் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்.
இலங்கையில் இயங்கி வரும் சிவசேனா அமைப்பினர் இது குறித்து கூட்டங்களை நடத்தி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர்.
பிரச்னைக்கான காரணி விஷயம் இது… இலங்கையின் கிளிநொச்சியில், மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில், இந்திய மக்களை அப்படி இப்படி குணப்படுத்தியுள்ள கிறிஸ்துவ போதகர் மோகன் சி.லாசரஸ் மார்ச் 30, 31 ஏப்.1 ஆகிய மூன்று தினங்கள் நம்பிக்கைப் பெருவிழா ஒன்றை நடத்துகிறார்.
இலங்கைத் தமிழ் மண் என்பது சைவ நெறி தழைத்த பூமி. கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இந்துக்களையும் நம்பிக்கைப் பெருவிழா எனக் கூறி அழைத்தால், வாருங்கள் உங்கள் சந்தோஷம் துக்கமாகும் என்று கூறி, இலங்கைத் தமிழர்கள் ஓட ஓட விரட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் ராம.ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளவை..!
தமிழக அரசே _ இந்திய அரசே
இலங்கை அரசே இந்து தமிழர்களை காப்பாற்று’
ஈசன் பூமியை
ஏசு பூமி ஆக்கிடும்
முயற்சியை தடுத்து நிறுத்து
இந்து உணர்வாளர்களே’
தமிழின உணர்வாளர்களே

வணக்கம்.
தமிழ்நாட்டில் நாலுமாவடி ஊரில் வானத்தின் வாசல் என்ற பெயரில் மத மாற்ற கூடம் வைத்து மதமாற்றம் வியாபாரி
மோகன் சி.லாசரஸ் என்பவரும் அவருடன்
ஜோன் K. பாலகுமார் மற்றும் ஜோயல் தாமஸ் ராஜ் என்பவரும் வருகின்ற மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் _ நம்பிக்கை பெரு விழா 2018 என்ற பெயரில் இலங்கை கிளிநொச்சியில் மஹா வித்தியாலயம் மைதானத்தில் சுவிசேஷ கூட்டம் நடத்தப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இதற்கு இலங்கை இந்துத் தமிழர்களை காத்து – சைவ பூமியை – சிவபூமியை – காத்திட அல்லும் பகலும் அயராது உழைக்கும் இலங்கை சிவசேனை தாய் சமய காப்பு மற்றும் அன்னிய மதவரவை தடுக்கும்
மதமாற்ற தடுப்பு குழு – மதகு – கூட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்து சைவ தமிழர்களின் கலாச்சாரம் – பாரம்பரியம் – பண்பாடுகளை அழித்து – அன்னிய கடவுளை வணங்க செய்து -மத மாற்றம் செய்து – நாடு பிடிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துவது ஒரு இந்து சைவ தமிழர்களின் கடமை ஆகும்.
ஆகவே இந்த கிறிஸ்தவமதமாற்ற வியாபாரி
மோகன் சி.லாசரஸ் மற்றும் கூட்டாளிகள் இலங்கைக்கு சுற்றுலா கடவு சீட்டில் சென்று
கடவுள் மாற்றம் செய்யும் இந்த கயமை தனத்தை தடுத்து நிறுத்திட இந்திய – இலங்கை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு இணைய தளத்தில் – Email மூலமாக – நேரடியாக சென்று கடிதத்தை புகார் மனுவை கை அளித்திட வேண்டுகிறேன்.
நாட்கள் குறைவு -படித்தவர்கள் – இந்து உணர்வாளர்கள் – தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.
இந்திய அரசு – தமிழக அரசு – இலங்கை அரசு
இலங்கை இந்து சைவ தமிழர்களை காத்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன்.
ஈசன் பூமியை – ஏசு பூமியாக மாற்றும் முயற்சியை தடுத்து நிறுத்துவோம்.
ஈழ பூமி – சிவ பூமி
ஈழ மண் – திருநீறு
நந்தி கொடி ஏந்தி
நயவஞ்சக
கிறிஸ்தவ கூட்டத்தை
விரட்டி அடிப்போம்
இழந்த மண்ணை
மீட்டெடுப்போம்
இருக்கும் மக்களை
காத்து நிற்போம்
இராம. இரவிக்குமார்
இந்து மக்கள் கட்சி
மாநில பொதுசெயலாளர்
அதிகமாக பகிர வேண்டுகிறேன். உங்கள் ஒரு பகிர்வு – ஒரு இந்து சைவ தமிழனை காத்திட உதவும்.
நன்றி



