இலங்கை, யாழ்ப்பாணம் காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்தின் தேர் திடீரென சரிந்து கவிழ்ந்துள்ளது.
சித்திரைத் திருவிழா பல ஆலயங்களில் கொண்டாடப் பட்டுவரூகிறது. இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்தின் வருடாந்திர உத்ஸவத்தில், இன்று தேர்த் திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று காலை பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துள்ளனர். அப்போது, திருவீதி உலா வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென தேர் சரிந்து கவிழ்ந்துள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தேர்த் திருவிழா துவங்கி, விமர்சையாக நடைபெற்று, தேர் நிலைக்கு வந்து சேரும் நேரத்தில்தான், திடீரென கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.