கேன்ஸ் திரைப்பட விழா (cannes film festival 2018) இன்று முதல் வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழா என்பது பிரான்சு, கான் நகரில் ஆண்டு தோறுய்ம் நடைபெறும் ஒரு பன்னாட்டுத் திரைப்பட விழாவாகும். 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகின் மிகப் பழையதும், உலக அளவில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு நிகழ்வும் ஆகும். இவ்விழாவில் உலகளாவிய ரீதியில், ஆவணத் திரைப்படங்கள் உட்பட அனைத்து வகைத் திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அழைப்பிதழ் பெற்றோர் மட்டுமே பங்குகொள்ளும் இவ்விழா ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறுகின்றது.