இலங்கையின் தெற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 8000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பேரிடர் மேலாண்மை மைய செய்திதொடர்பாளர் பிரதீப் கோடிப்பிள்ளை, மழை வெள்ளம் காரணமாக பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த மழை, வெள்ளத்தில் சிக்கி யாரும் பலியாகவில்லை. இன்று இரவும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பவதால், தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மழை,வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலியானதும், ஆயிரக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



