குவாண்டிகோ தொடரில் இந்தியா குறித்து சர்ச்சை காட்சி தொடர்பாக மன்னிப்புக் கேட்ட நடிகை

உலகம் சற்றுமுன்
02 June10 Priyanka Chopra - 2026
 

அமெரிக்க தொலைக்காட்சி தொடரான குவாண்டிகோவில் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதற்காக, நடிகை பிரியங்கா சோப்ரா மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“தெ ப்ளட் ஆஃப் ரோமியோ” ((The Blood of romeo)) எபிசோடில், இந்தியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தும், இந்தியா செய்யும் தவறுகளுக்கு பாகிஸ்தான் மீது குற்றம்சுமத்தும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இந்த தொடரில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அலெக்ஸ் பார்ரிஸ் ((Alex parrish)) கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், குவாண்டிகோ தொடரின் காட்சிகள், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதை அறிந்து கொண்டதாகவும், இதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். தாம் ஒரு இந்தியப் பெண் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்வதாவும் இதில் மாற்றமில்லை என்றும் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.