இத்தாலியின் பொலாக்னா விமான நிலையம் அருகே டேங்கர் லாரிகள் மோதி தீப்பற்றியதில் 2 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். லாரிகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீயானது பாலத்தின் கீழ் இருந்த கார் நிறுத்தும் இடத்திற்கும் பரவியது. இதில் அங்கிருந்த பல்வேறு வாகனங்களும் தீப்பிடித்து வெடித்து சிதறியுள்ளன. லாரிகள் மோதி வெடித்து சிதறியபின் கார் நிறுத்தும் இடத்தில் பரவிய தீயில் ஒருவர் சிக்கிக் கொண்டது பற்றிய காட்சியும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Popular Categories




