உப்பில் விஷம் வைத்து மகனைக் கொன்ற தாய்க்கு 20 வருடம் சிறை

lucy-spears-us-sentenced-killing-son-saltவைட்ப்ளெய்ன்ஸ் (நியூ யார்க்): உப்பில் விஷம் வைத்து தனது மகனுக்குக் கொடுத்து, அவனைக் கொலை செய்த குற்றத்துக்காக, தாய்க்கு 20 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்துக்காக, கென்டுகி ஸ்காட்வில்லியைச் சேர்ந்த லூசி ஸ்பியர்ஸுக்கு அதிகபட்சமாக 25 வருட தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தது. அந்தப் பெண்மணி மன நல பாதிப்பில் இருந்ததால், புதன்கிழமை இன்று தீர்ப்பு கூறிய நியூயார்க் நீதிமன்ற நீதிபதி, இந்தக் குற்றமானது அளவிடமுடியாத கொடூரத்தன்மை வாய்ந்ததாக உள்ளது என்று கூறினார். அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், அவருக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டினர். கவனிப்பு தேவைப்படும் தனது மகனை இந்தக் குற்றவாளி நோய்வாய்ப் படுத்தி கொலை செய்துள்ளார் என்று கூறினர். இருப்பினும் ஸ்பியர்ஸ் தரப்பு வழக்குரைஞர், அந்தப் பெண் தனியாளாக பணிக்குச் சென்று வேலை செய்து தனது மகனை அன்புடன் வளர்த்து வந்திருக்கிறார், எனவே 15 வருடமாக தண்டனைக் குறைப்பை வேண்டினார். இறுதியில், நீதிபதி 20 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.