
சிங்கப்பூரின் தைப்பூசத் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தேறியது.
முந்தைய நாள் இரவு 10.30க்குத் தொடங்கிய காவடி ஊர்வலங்கள் நேற்றிரவு வரை நீடித்தது. இந்த ஊர்வலத்தில் 8419 பால் குடங்கள், 203 பால் குடங்கள், 10 தொட்டில் காவடிகள், 205 அலகுக் காவடிகள், 41 ரதக் காவடிகள் என எடுத்து வந்து, பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
“தைப்பூசம் என்பது ஒரு துடிப்பு மிக்க, பயபக்தி மிகுந்த ஒரு திருவிழா. தங்களை நன்கு தயார் படுத்திக் கொண்டு பக்தர்கள் பால் குடங்களையும், காவடிகளையும் ஏந்தி ஊர்வலமாகச் சென்று கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றனர்” என்று தனது பேஸ்புக் பதிவில் பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டிருந்தார்.
சட்ட அமைச்சர் சண்முகம் சிலிகி ரோட்டிலிருந்து அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் வரை நடந்தே சென்றார்.
- ஏபிஆர், சிங்கப்பூர்



