91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா! இந்தியப் பெண் குறித்த ’பீரியட்’ ஆவண குறும்படத்துக்கு விருது!

ஹாலிவுட் திரை உலகின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கும் விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.

இந்நிலையில் 91-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறந்த குறும்படத்துக்கான விருது ஃபீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ் என்ற படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாக இந்த ஆவண குறும்படம் தயாராகியுள்ளது .ஃபீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ் படத்திற்காக ரேகா செஹ்டாப்சி, மெலிசா பேர்டன் ஆகியோர் பெற்றனர். இந்த படம் கோவையைச்சேர்ந்த முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்க்கான விருது ஃபர்ஸ் மேன் படத்துக்கு வழங்கப்பட்டது. நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்ததை மையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்துக்கான விருதை ஸ்கின் படம் வென்றது.

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது GREEN BOOK படத்தில் நடித்த மஹேர்சலா அலிக்கு வழங்கப்பட்டது

சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது BAO படத்துக்கு வழங்கப்பட்டது!

சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது VICE படத்தில் பணியாற்றிய கிரேக் கேனோம், கேட் பிஸ்கோ, பாட்ரிசியா தெஹானே ஆகியோருக்கு வழங்கப்பட்டது

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை BLACK PANTHER படத்துக்காக ரூத் கார்டர், தயாரிப்பு வடிவமைப்பாளர் ஹன்னா பீச்லர், செட் அமைப்பாளார் ஜே ஹார்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்டது

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது ROMA படத்தின் அல்போன்சோ குவாரனுக்கு வழங்கப்பட்டது; சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவிலும் ROMA படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது

சிறந்த SOUND EDITING, சிறந்த SOUND MIXING, சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை BOHEMIAN RHAPSODY படம் வென்றது!

இந்திய பெண் குறித்த PERIOD. END OF SENTENCE. என்ற ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!

Rami Malek wins Oscars for Best actor male in a leading role for Bohemian Rhapsody

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...