அடடே… பின்னணியில் திமுக.,? மாரிதாஸ் மேட்டரால் நொந்து.. பியூஷ் மானுஷை அனுப்பி…!

உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
dmktweet - 2026

கடந்த இரு நாட்களாக திமுக., குறித்து வீடியோக்களை வெளியிட்ட மாரிதாஸ் என்ற சமூக சேவகர் மீது, திமுக., புகார் அளித்த விவகாரத்தில் கருத்துகள் விவாதிக்கப் பட்டு வந்தன. நேற்றைய டிவிட்டர் பதிவுகளில் ட்ரெண்டிங்கில் இந்த விவகாரம் முதலிடம் பிடித்தது.

இந்த நிலையில் தேசிய அளவில் திமுக.,வின் கருத்துச் சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டு வந்தது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, இன்று பாஜக., அலுவலகத்துக்கு சேலத்தில் பியூஷ் மானுஷ் என்ற நபரை அனுப்பி வைத்து பதற்றத்தை உருவாக்கி, கருத்துச் சுதந்திரத்தின் நிலையைப் பாரீர் என்று ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறது திமுக., என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

piyush manush bjp - 2026

மாலை 5 மணிக்கு மேல் பியூஷ் மானுஷ் என்பவர், பாஜக., அலுவலகத்துக்குச் சென்று, கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் திமுக., தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவுகளில் இரு பதிவுகளைச் செய்தார்.

ஒன்றில், கௌரி லங்கேஷ் கொலை குறித்து குறிப்பிட்டு, அடுத்த பதிவில் களப் பலிக்கு தயாராக்கி விட்டு அனுப்பப் பட்டவர் பியூஷ் மானுஷ் என்ற ரீதியில் குறிப்பிட்டிருக்கிறார் என்று டிவிட்டர் பதிவுகளில் விபரீதமாகக் குறிப்பிடுகிறார்கள் டிவிட்டர்வாசிகள்!

இப்போது கருத்துச் சுதந்திரம் எதிர்பார்த்தது போல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது! டிவிட்டர் பதிவுகளில் ஏற்படும் கருத்து யுத்தம் இந்த அளவுக்கு அரசியல் யுத்தமாக மாறியுள்ளது தமிழகத்தில் திமுக.,வினால் ஏற்பட்டிருக்கும் விநோதம் என்கின்றனர் சமூக வலைத்தளங்களில்!

முந்தைய செய்தி..: பாஜக., அலுவலகத்தில் பியூஷ் மானுஷ்… கும்மாங்குத்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.