வெகு நாட்களாய் படுக்கை அறையில் வேலைக்காரி செய்த வேலை அம்பலம்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை
bedroom - 2026

சென்னை அபிராமபுரத்தில் தொழிலதிபர் பெரியவண்ணன் வசித்து வருகிறார். இவரது படுக்கை அறையில் உள்ள பீரோவில் அவ்வப்போது பணம் திருடு போயுள்ளது.

திருடு போவது சிறிய அளவிலான தொகைதான் என்பதால் ஒருவேளை நாம்தான் செலவு செய்துவிட்டு மறந்துவிட்டோம் என கருதி அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார் பெரியவண்ணன்.

நாளடைவில் பீரோவில் வைக்கும் பணம் ரெகுலராக திருடுபோக அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தார். ஆனால் யாருமே வெளி ஆட்கள் அங்கு வரவில்லை.

கடைசியாக படுக்கை அறையிலேயே சிசிடிவி கேமரா பொருத்தி விட்டார் பெரியவண்ணன்.பின்னர் அந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் பல வருடங்களாக பணிப்பெண்ணாக இருக்கும் உஷாதான் பீரோவை திறந்து பணம் எடுத்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து காவல்நிலையத்தில் தொழிலதிபர் புகார் அளிக்க அங்கு உஷாவை அழைத்து சென்று காவல்துறையினர் முறைப்படி விசாரித்ததில் பல உண்மைகள் வந்தது.

பீரோ சாவி போலவே ஒரு போலி சாவி தயார் செய்து கடந்த 5 வருடங்களில் கைவரிசை காட்டியுள்ளார் பணிப்பெண் உஷா.அதாவது ரூ.19.85 லட்சம் வரை திருடிய உஷா அந்த பணத்தில் 40 சவரன் தங்க நகைகள் வாங்கி வைத்துள்ளார். வீட்டிலும் கொஞ்சம் சேமித்து வைத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.