டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

உள்ளூர் செய்திகள் பொது தகவல்கள் மதுரை
rajendra balaji - 2026

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை தற்பொழுது தேர்தல் நடத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்னும் அதிகாரப் பூர்வமான எந்த அறிவிப்பும் இது வரை வெளியாகவில்லை.

இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வரும் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள் பதவி ஏற்பார்கள் என்று பிராமணபத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.