சிறுமியை சுவரோடு மோதித் தள்ளிய கார்… துடிதுடித்து சுருண்டு விழுந்த சிறுமி! வைரல் வீடியோ!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
car hit 9year old girl in navi mumbai - 2026

சிறுமியை சுவரில் மோதி தள்ளிய கார்… துடித்து விழுந்த சிறுமி. இளகிய மனம் உள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்கவேண்டாம்.! என்று கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.

நவீ மும்பையில் உள்ள ஒரு ஹவுசிங் சொசைட்டியில் 9 வயது சிறுமி மீது கார் மோதியது. கேட்டிலிருந்து சொசைட்டியின் உள்ளே நுழைந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சிறுமியை சுவரோடு சுவராக மோதி இழுத்துச் சென்று தள்ளியது.

விளையாடுவதற்காக சுவர் ஓரமாக தயங்கித் தயங்கிச் சென்று கொண்டிருந்த சிறுமியை சுவரோடு ஒட்டி உரசி மோதியது. அதனால் சிறுமி சுவருக்கும் காருக்கும் இடையே நசுங்கிப் போனாள். அந்த சிறுமியின் பெயர் சாக்சி சிங் என்று தெரிகிறது.

தீவிரமாகக் காயமடைந்த சிறுமியை எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கார் ஓட்டி, சிறுமி மீது மோதிய நபர் ஆசிரியராகப் பணிபுரியும் நரேஷ் மாத்ரே (44) என்பவரின் டிரைவர். டிரைவர் கார் ஓட்டி வந்த போது, மிகக் குறுகிய கேட் வழியாக கார் நகர்ந்து வந்ததும், திடீரென எதிரே சிறுமியைப் பார்த்த பதற்றத்தில், பிரேக் மீது கால் வைக்க எடுத்த போது, ஆக்சிலேட்டர் அதிக அழுத்தம் கொடுக்கப் பட்டு விட்டதாகவும் போலீஸாரிடம் அந்த டிரைவர் கூறியுள்ளார்.

கலம்போலி காவல் நிலைய மூத்த ஆய்வாளர் சதிஷ் கெய்க்வாட் இது குறித்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் சிறுமி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குச் சென்று புகார் கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால், சிறுமியின் தந்தை புகார் கொடுக்க மறுத்துவிட்டாராம். இதனால் போலீஸார், மாத்ரே மீது வேகமாகக் கார் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

https://youtu.be/FLEp4u05OKI

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.