புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் தோனி! வைரல் வீடியோ!

இந்தியா பொது தகவல்கள் விளையாட்டு
dhoni 1 - 2026

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருப்பவர் தல தோனி. இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.

அதிலும் தமிழகத்தில் தோனிக்கென தனிரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தோனி சென்னை அணியின் தலைவராக இருந்து பல முறை வெற்றி பெற்று பெருமை அடைய செய்துள்ளார்.

இவரது மனைவி சாக்ஷி. இருவரும் அனைவருக்கும் சிறந்த ஜோடியாக விளங்கி வருகின்றனர்.மேலும் இருவரும் ஒன்றாக பல விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர்.

dhoni - 2026

இந்நிலையில் இந்தியா முழுவதும் நேற்று புத்தாண்டு விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல பிரபலங்களும் மிகவும் உற்சாகமாக புதுவருடத்தை வரவேற்றனர்.

தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்களுடைய நண்பர்களுடன் புத்தாண்டை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

மேலும் அப்பொழுது தோனி தனது மனைவியை கட்டியணைத்து நடனம் ஆடியுள்ளார். பின்னர் அனைவரிடமும் வாழ்த்துக்களை கூறினார். இந்நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Posts by Suprasanna Mahadevan:

ALSO READ:  தீபாவளி சிறப்பு ரயில்கள்; முன்பதிவு தொடங்குகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =