டிக் டாக் மோகம்: உண்மை துப்பாக்கி உயிரைக் குடித்த சோகம்!

இந்தியா கிரைம் நியூஸ் லைஃப் ஸ்டைல்
tik tok - 2026

டிக்டாக் மோகத்தால் நிறைய அசம்பாவிதங்கள் நடந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு மாணவன் உயிரிழந்தது அதிர்ச்சியையும் சோகத்தையையும் ஏற்படுத்துயுள்ளது.

டிக் டாக்கில் அதிக லைக்ஸ் வாங்க ஆசைப்பட்ட உதிர்ப்பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் தலையில் துப்பாக்கி வெடித்து, தலை சிதறி உயிர் இழந்த உள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் ஹபீஸ் எனும் பகுதியை சேர்ந்தவர் கேஷவ். 18 வயதாகும் கேஷவ் 12 ஆம் வகுப்பு படித்துகொண்டறிந்த நிலையில் அவ்வப்போது டிக் டாக் வீடியோ செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கேஷாவின் தந்தை ஆர்மியில் இருப்பதால் அவரது துப்பாக்கி வீட்டில் இருந்துள்ளது.

tiktok 3 - 2026

தனது தந்தை வீட்டில் இல்லாத நேரம், துப்பாக்கியை எடுத்து தனது தலையில் வைத்து சுடுவதுபோல் வீடியோ எடுக்க முயன்றுள்ளார் கேஷவ்.

அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் கேஷவ் தலை சிதறி உயிர் இழந்துள்ளார். டிக் டாக் வீடியோ எடுக்க ஆசைப்பட்டு 18 வயது இளைஞர் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.