திமுக., கோடி-க்கு போட்டியாக பாஜக! முரசொலி பஞ்சமி நில மீட்புக்காக கையெழுத்து இயக்கம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
dmk signature campaign - 2026

முரசொலி மூல பத்திரம் எங்கே? என்று கேட்டு அரசியல் செய்து கொண்டிருந்த பாஜக., தற்போது ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தப் போவதாகக் கூறப் படுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு முயற்சி ஆகியவற்றுக்கு எதிராக திமுக., ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று தில்லியில் சென்று சமர்ப்பிக்கப் போவதாகக் கூறி கையெழுத்து பெற்று வருகிறது.

dmk signature campaign1 - 2026

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 38 எம்.பி.,க்களை தன் வசம் வைத்திருக்கும் திமுக., கூட்டணி, அதே எம்.பி.க்கள் இருக்கும் அவையில் நிறைவேற்றப் பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கையெழுத்து இடப்பட்டு சட்டமாகியுள்ள சிஏஏ.,வுக்கு எதிராக திமுக., கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. அதாவது குடியரசுத் தலைவரின் கையெழுத்துக்கு எதிராக, குடிமக்களிடம் கையெழுத்து பெறப்படும் தேசத்துரோகச் செயலைச் செய்து வருகிறது. மேலும், நாட்டின் குடியரசுத் தலைவரின் கையெழுத்துக்கு எதிராக கையெழுத்து பதிவு செய்து, நாட்டின் குடிமக்களையும் தேசவிரோத செயலில் ஈடுபடுத்தும் வேலையைச் செய்து வருகிறது திமுக.,!

இவ்வாறு குடிமக்களிடம் பெறப்படும் கையெழுத்து, எப்படி பெறப்படுகிறது என்பதற்கு உதாரணமாக இந்தப் பதிவு சமூகத் தளங்களில் உலா வருகிறது.

stalin sign - 2026

காலை சென்னை போரூர் அருகில் உள்ள காரம்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவில் அருகே சில திமுக ரவுடிப் பெண்கள் வருவோர் போவொரிடம் எல்லாம் கையெழுத்து பெற்றுக் கொண்டிருந்துள்ளனர். கோயிலில் இருந்து வெளியே வந்த நம் நண்பரிடமும் கையெழுத்து கேட்க, அவர் எதற்கு இந்த கையெழுத்து என்று கேள்வி எழுப்ப, உடனே திமுக ரவுடிகளுக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். அதன் பிறகுதான் நண்பர் வீடியோ எடுக்க தொடங்கியுள்ளார்.

“அந்த பெண்களுக்கு சி.ஏ.ஏ. என்றால் அடிப்படை கூட தெரியவில்லை, கேட்டால் அத்தனை திமிராக பேசுகிறார்கள். பல பொதுமக்கள் என்னவென்றே தெரியாமல் கையெழுத்து போட்டு போகிறார்கள். இவர்களுக்கு இத்தனை கையெழுத்து வாங்கினால் இத்தனை பேமண்ட் என்று டார்கெட்” என்றார்

வீடியோ எடுத்து முடிந்து நண்பர் நடக்க தொடங்கியதும், பின்னால் துரத்தி வந்த திமுக ரவுடிகள் வீடியோவை அழிக்கச் சொல்லி மிரட்ட தொடங்கியுள்ளனர். “நீ எப்படி வீடியோ எடுக்கலாம், எங்கள கேள்வி கேட்க நீங்க யாரு ?” என்றெல்லாம் கேள்வியாம். ஒருவழியாய் சமாளித்து வந்து விட்டார் நண்பர்.

ஆட்சிக்கு வராமலேயே திமுக ரவுடிகள் இத்தனை அராஜகம். வந்தால் தமிழகம் என்னவாகும் ?

இந்நிலையில், தமிழக பாஜக.,வின் எஸ்சி எஸ்டி பிரிவு ஒரு ஆலோசனை மேற்கொண்டிருக்கிறது. திமுக.,வின் தேச விரோத பிரசாரத்துக்கு எதிராக, திமுக.,வின் இரட்டை வேடத்தை மக்களிடம் எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பாக, முரசொலி மூலப்பத்திரம் எங்கே? முரசொலி பஞ்சமி நிலத்தை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுகோள்… என்று கூறி பஞ்சமி நில மீட்பு குறித்து எஸ்சி எஸ்டி மக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை நடத்தப் போகிறோம் என்று கூறியுள்ளார் பாஜக., வின் எஸ்சி பிரிவின் மாநிலத் தலைவர் ம.வெங்கடேசன்.

பாகிஸ்தான் முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேற குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்தியர்களிடம் கையெழுத்து பெற்று வரும் திமுக.,விடம் இருக்கும் பஞ்சமி நிலத்தைப் பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப் போகிறோம் என்று களம் இறங்கவுள்ளது தமிழக பாஜக.,வின் எஸ்சி எஸ்டி பிரிவு.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.