அதிர்ச்சி… பாகிஸ்தானின் ஒரு மாகாணம் போல் செயல்படும் மத்தியப் பிரதேசம்! டிவிட்டர்வாசிகள் கோபம்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி
madhyapradesh question paper - 2026

மத்தியபிரதேச பத்தாம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேச அரசின் கல்வி வாரியத்தின் சார்பில் தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வில் சமூக அறிவியல் பாடத்தின் வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பதை ஆசாத் காஷ்மீர் அதாவது சுதந்திர காஷ்மீர் என்று குறிப்பிட்டு, விடை அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. தற்போது மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. எனவே இதனை பெருமளவில் சமூகத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

நமது இந்திய அரசின் நெறிமுறைப்படி காஷ்மீர் இந்தியாவின் ஒன்றுபட்ட பகுதியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானால் 1947இல் முறைகேடாக ஆக்கிரமிக்கப் பட்ட பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று குறிப்பிட்டு அதனை மீட்பதற்கான முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

மேலும், இந்தியாவில் சிறப்பு அந்தஸ்துடன் இருந்த ஜம்மு காஷ்மீர், தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக, இந்தியாவின் ஒன்று பட்ட பகுதியாகவே அரசியலமைப்பு சட்டப்படி அழைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் குரலாக மத்திய பிரதேச காங்கிரஸ் அரசின் கல்வி வாரிய வினாத்தாளில் ஆசாத் காஷ்மீர் என்று குறிப்பிட்டு இருப்பதால் இது தற்போது பெரும் சர்ச்சையாகி வருகிறது.

இதற்கு பதிலளித்துள்ள பலரும் காங்கிரஸ் கட்சியின் உள் நோக்கம் மிகத் தெளிவாக தெரிகிறது என்று தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இத்தகைய காரணங்களால் தான் கல்வி வாரியங்களில் கட்சி தொடர்பான மார்க்சிய இடதுசாரி சிந்தனையாளர்கள் இடம்பெற்றிருப்பதை கலைக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது இந்திரா காங்கிரஸாக இருந்து, இப்போது குலாம்நபி காங்கிரஸாக இருக்கிறது என்று சிலர் கருத்திடுகின்றனர்! மாநிலத்தை ஆளும் கமல்நாத் அரசு பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டு விட்டது; அவர்கள் இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானுக்கு அதிக விசுவாசத்துடன் நடந்துகொள்கின்றனர் என்கிறார்கள் டிவிட்டர் பதிவுகளில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.