அஜித்துக்காக இத செய்யணும்! ஆசையை வெளியிட்ட பிரபலம்!

சினி நியூஸ் சினிமா
ajith 1 - 2026

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை.

இந்நிலையில் சீரியலிலும் , சினிமாவிலும் நடிகையாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணிபுரிந்து வருபவர் தீபா வெங்கட். இவர் முதன் முதலில் அஜித் மற்றும் அரவிந்த் சாமி நடித்து படம் பாசமலர்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன்பிறகு விக்ரம் நடித்து வெளிவந்த தில் படத்தில் அவருக்கு தங்கையாக இவர் நடித்திருந்தார். மேலும் இவர் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த கோலங்கள் தொடரில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

deepa venkat - 2026

இதனை தொடர்ந்து சித்தி, அண்ணாமலை, சாரதா உள்ளிட்ட சீரியல்களிலும் கலக்கியிருந்தார். இதன்பின், தனது முழு கவனத்தையும் டப்பிங் பக்கம் திருப்பி கொண்டார் தீபா. அவ்வாறு பல முன்னணி கதாநாயகிகளுக்கு இவர் தனது சொந்த குரலில் டப்பிங் பேச துவங்கினார்.

அதிலும் குறிப்பாக அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவிற்கு இவர் டப்பிங் பேசி இருந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “உங்களுக்கு திடீரென ஆண் குரல் வந்துவிட்டது, அப்போது நீங்கள் யாருக்கு டப்பிங் கொடுக்க ஆசை படுவீர்கள்” என்று தொகுப்பாளர் கேட்க. அதற்கு பதிலளித்த தீபா “ தல அஜித்துக்கு தான் குரல் கொடுக்க வேண்டும் அது தான் என்னுடைய ஆசை” என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.