பரிதாபம்… இப்படியும் நடக்குமா? கட்டிய தாலியே கழுத்தில் சுருக்குக் கயிறானால்..!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
marriage tied - 2026

தெலங்காணா மாநிலம் வாரங்கலில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நேர்ந்தது. கழுத்தில் இருந்த தாலிக் கயிறு கழுத்தில் சுருக்காக மாறி அங்கன்வாடி ஆயாவின் உயிருக்கு உலை வைத்தது.

கழுத்தில் இருக்கும் தாலியே எமன் கையில் இருக்கும் பாசக்கயிறாக மாறியது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அங்கன்வாடி பெண்மணியின் உயிர் போனது.

தாலிக் கயிறு கழுத்தில் இறுக்கி மூச்சுவிட முடியாமல் உயிர் மூச்சு காற்றில் கலந்தது . இந்த சோக சம்பவம் தெலங்காணாவில் உள்ள மெகபூபாபாத் மாவட்டத்தில் நடந்தேறியது.

தந்தாலபல்லியைச் சேர்ந்த குனுகுட்ல எல்லம்மா (50) அந்த கிராமத்தில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் இரண்டாவது ஆயாவாக பணிபுரிந்து வருகிறார். அங்கன்வாடி மையத்தில் வேலையை முடித்துக் கொண்டு வந்த எல்லம்மா பூட்டியிருந்த தன் வீட்டை திறப்பதற்கு முயற்சி செய்தார்.

சாவியை தாலிக் கயிற்றில் கட்டி இருந்ததால் குனிந்து பூட்டைத் திறக்க முயற்சி செய்தார். எதிர்பாராதவிதமாக அந்த நேரத்தில் கால் வழுக்கி கீழே விழுந்ததால் கழுத்தில் இருந்த தாலி கழுத்தில் சுருக்கு ஆகி இறுக்கிப் பிடித்தது. சாவி பூட்டில் இறுக்கி பிடித்துக் கொண்டதால் அவர் கழுத்தில் இருந்த தாலிக் கயிறு கழுத்தை இறுக்கி விட்டது. அதனால் மூச்சுவிட முடியாமல் எல்லம்மா அங்கேயே உயிர் பிரிந்து இறந்து போனார்.

இந்த சோக சம்பவம் குறித்து அறிந்த கிராமத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். தாலிக்கயிறே சுருக்குக் கயிறாக மாறி பெண்மணியின் உயிர் பிரிந்தால் அக்கம்பக்கத்தார் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். எல்லம்மாவின் மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மங்களகரமான தாலிக் கயிற்றில் சாவி, ஊக்கு போன்ற இரும்பு சாமான்களை போட்டுக் கொள்ளக் கூடாதென்று நம் பெரியவர்கள் கூறியுள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.