துன்பங்கள் நமக்கிருப்பினும், கொடுத்து இன்புறுங்கள்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
tree 1
tree 1

நம்மைச் சுற்றியுள்ள பல பிராணிகளையும் செடிகளையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன

ஒரு மரம் தான் சூரிய வெப்பத்தை சகித்துக் கொண்டு தன்னிடம் வந்தவனுக்கு நிழலைக் கொடுக்கிறது இதனால் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தான்.

அந்த மரம் தன்னை பூஜிப்பவனுக்கும் அதை வெட்ட கூடியவனுக்கும் சமமாகவே உபகாரம் செய்யும். அதனால் நமக்கு சத்ருவாக இருக்கிறவனக்கும் கூட கெடுதல் செய்யாமல் உபகாரம் செய்ய வேண்டும் இதை தன் வாழ்க்கையில் கடைபிடித்தவர் ஸ்ரீ தர்மராஜா

துரியோதனன் அவருக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அவர்களிடம் மாட்டிக் கொண்ட பொழுது அவனை அவர்களிடமிருந்து தர்மர் விடுவித்தார் அதுபோல பசு மான் முதலிய பிராணிகளுக்கும் அசௌகர்யம் இருந்தாலும் அவைகளை அனுபவித்துக்கொண்டு இருக்குமே தவிர பிறருக்கு ஒன்றும் தொந்தரவு செய்யாது.

நம்முடைய கஷ்டத்தை நாம் அனுபவிக்க வேண்டுமே தவிர பிறரிடம் அதை சொல்லி பிரயோஜனமில்லை பிராணிகள் நாம் ஆகாரம் கொடுத்தால் சாப்பிடும் கொடுக்காவிட்டால் அப்படியே இருக்கும் அது போல நாமும் தெய்வ கிருபையால் எது கிடைக்கிறதோ அதில் சந்தோஷப்பட வேண்டும் அதிகமாக வேண்டும் என்று ஆசைப் படக்கூடாது இப்படி பல விஷயங்களை நாம் பிராணிகள் செடிகள் மூலமாக தெரிந்து கொண்டு நடந்தால் நமக்கு நல்லது.

bharathi theerthar - 2026

பவந்தி‌ நம்ராஸ்தக: ஃபலோத்கமை:
நவாம்புபிர்தூர விலம்பினோ கனா:!
அநுத்ததாஸ் ஸத்புருஷாஸ் ஸம்ருத்திபி:
ஸ்வபாப ஏவைஷ பரோபகாரிணாம்!

மரங்கள் பழங்களை வைத்துக் கொண்டு குனிந்து இருக்கிறது மேகங்களும் ஜலத்தை வைத்துக் கொண்டு ஆகாசத்திலிருந்து கீழே இறங்குவதற்கு தயாராக இருக்கிறது சத் புருஷர்கள் எவ்வளவு ஐஸ்வரியங்கள் இருந்தாலும் அடக்கத்தோடு இருப்பார்கள் பரோபகாரம் செய்பவர்கள் சுபாவம் அப்படித்தான் இருக்க வேண்டும். என்று மகாசன்னிதானம் அருளுரை வழங்குகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.