ஆரோக்கிய உணவு : மூலிகை சப்பாத்தி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
mulikar sappati

மூலிகை சப்பாத்தி

தேவையானவை:
கோதுமை மாவு – 200 கிராம்,
வெற்றிலை – ஒன்று,
துளசி இலை – 10,
ஓமம் – ஒரு டீஸ்பூன்,
புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். வெற்றிலை, துளசி, ஓமம், புதினா ஆகியவற்றுடன் கொஞ்சம் நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து நன்கு வடிகட்டி, அந்த நீரை மாவில் ஊற்றி, மிளகுத்தூள் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக திரட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, சப்பாத்தியைப் போட்டு, மிதமான தீயில் வாட்டி எடுக்கவும்.

குறிப்பு: கமகமக்கும் இந்த சப்பாத்தி, உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணைபுரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.