![kiirai pulav 1](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2020/05/kiirai-pulav-1.jpg?w=696&ssl=1)
கீரை புலாவ்
தேவையானவை:
பச்சரிசி – 250 கிராம்,
பச்சை மிளகாய் – 2,
பொடியாக நறுக்கிய அகத்திக்கீரை,புதினா – – தலா ஒரு கைப்பிடி அளவு,
பொடியாக நறுக்கிய பொன்னாங் கண்ணிக்கீரை – ஒரு கப்,
பூண்டுப் பல் – 4, கரம்
மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
நெய் – 50 மில்லி,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசியுடன் இரு பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய பொன்னாங்க ண்ணிக்கீரை, அகத்திக்கீரை, புதினா, நறுக்கிய பூண்டுப் பல் சேர்த்துக் கிளறி… உப்பு, கரம் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். இதை சாதத்துடன் நன்கு கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.