இந்தியாவை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி : பிரதமர் மோடி உரை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
கொரோனா பரவல் பாதிப்பை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு விதித்து அது அடுத்து வரும் மே 17ஆம் தேதி முடியும் நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக உரை நிகழ்த்தினார்.

இந்தியாவை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக பிரதமர் மோடி உரை நிகழ்த்தினர்.

கொரோனா பரவல் பாதிப்பை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு விதித்து அது அடுத்து வரும் மே 17ஆம் தேதி முடியும் நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது….

கொரோனாவை எதிர்த்து போராட ஜிடிபியில் 10 சதவீதம் ஒதுக்கப்படும். பொருளாதாரத்தை மீட்க ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் படும். இது குறித்து, நாளை நிதி அமைச்சகம் தனது திட்டத்தை அறிவிக்கும்.

உலகை இந்தியா வழி நடத்த வேண்டும். மனிதர்களுக்கு பாடம் கற்று தந்த கொரோனா நம்மை நாமே காப்பாற்ற வேண்டும்! 4 மாதமாக கொரோனாவுடன் போராட்டம் நடத்தி வருகிறோம்

உலகம் கடந்த 4 வாரங்களாக கொரோனாவுடன் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறது. இதில் 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது. இந்த வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே சின்னாபின்னமாக்கியிருக்கிறது.

தற்போது கொரோனா வைரசிலிருந்து உயிர்களை காப்பாற்ற உலகமே முயற்சி செய்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. இது போன்ற உலகளவிலான ஊரடங்கு இதுவரை கண்டிராதது.

வைரஸ் பாதிப்பிற்கு பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்த வேண்டும். கொரோனா வைரசால் உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. வைரசிற்கு எதிரான போரில் நாம் இப்போது முக்கியக் கட்டத்தில்உள்ளோம். இந்தியாவிற்கு ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொரோனா வைரைசுக்கு முன்பு இந்தியாவில் பி.பி.இ. தயாரி்ப்பு கிடையாது. இப்போது நாம் தினசரி 2 லட்சம் கிட்கள் தயாரித்து வருகிறோம். உலகுக்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும். இந்தியா தனது கொள்கைகளால் உலகை மாற்றியிருக்கிறது.

ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து வரும் 18ஆம் தேதி முடிவு செய்வோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.