TrueCaller வழியே பெறப்பட்ட 4.75 கோடி இந்தியர்களின் ரகசியங்கள்… வெறும் 1000 டாலருக்கு வித்தாங்களாம்!

தொழில்நுட்பம் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
trucaller image
trucaller image

வெறும் 1000 டாலருக்கு 4 .75 கோடி இந்தியர்களின் பெர்சனல் தகவல்களை ஹேக்கர்கள் விற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்ரூகாலர் ஆப் மூலம், 4.75 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை, வெறும் ஆயிரம் டாலருக்கு சைபர் கிரிமினல்கள் விற்றதாக ஆன்லைன் உளவுத்துறை நிறுவனமான சைபிள் தெரிவித்துள்ளது.

ஆயினும், ட்ரூகாலர் செய்தித் தொடர்பாளர் இவ்வாறு தங்கள் தரப்பில் இருந்து தகவல்கள் விற்கப் படுவதாகக் கூறப் படும் குற்றச்சாட்டுகளை பலமாக மறுத்துள்ளார். இவ்வாறு செயல்படுபவர்கள், ட்ரூகாலர் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி விற்கிறார்களே தவிர, ட்ரூகாலர் மூலம் எவரது தகவல்களும் திருடப்படவில்லை என்கிறார்.

எங்கள் தரப்பில் இருந்து ஆய்வாளர்கள், ஒரு விற்பனையாளரை அடையாளம் கண்டனர். அவர் 47.5 மில்லியன் இந்தியர்களின் ட்ரூகாலர் பதிவுகளை 1,000 அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளார். ஆனால், இதுபோன்று தகவல்கள் விற்கப்பட்டது எங்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆயினும் இவ்வாறு விற்கப் பட்ட தகவல்களில், ஒருவரின் தொலைபேசி எண், பாலினம், நகரம், மொபைல் நெட்வொர்க், பேஸ்புக் ஐடி ஆகிய தகவல்கள் அடங்கும் என்று கூறப் படுகிறது. இந்தத் தகவல்கள் கசிவு, இந்தியாவில் ஸ்பேம் மெயில்கள், விளம்பர மெசேஜ்கள், ஸ்பேம்கள், வணிக மோசடிகள், அடையாள திருட்டுகள் என மோசடியாளர்களை செயல்படத் தூண்டக் கூடும்.

truecaller
truecaller

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.