இங்க பாருங்க இப்படி செய்யணும் சுவீட் மங்களூர் போண்டா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
mangalore ponda sweet

மங்களூர் போண்டா சுவீட்

தேவையான பொருட்கள்
மைதா – 1 கப்

சர்க்கரை – 1/2 கப்

தயிர் – 1 1/2 கப்

பேக்கிங் சோடா – 1 சிட்டிகை

உப்பு – 1 சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மைதாவைப் போட்டு, அதில் பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தயிர் சேர்த்து ஓரளவு போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இனிப்பான மங்களூர் போண்டா ரெடி

Posts by Suprasanna Mahadevan:

ALSO READ:  திருச்செந்தூர் சூர சம்ஹாரம்; ஏற்பாடுகள் தீவிரம்!