பக்ரீத்.. பசுக்களைக் கொல்ல வேண்டாம்: தெலங்காணா அமைச்சர் மொஹம்மத் அலி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
telangana-minister-mahmood-ali
telangana-minister-mahmood-ali

பசுக்களை கொல்ல வேண்டாம்… முகமூது அலி.

பக்ரீத் தொடர்பாக பசுமாடுகளை கொல்ல வேண்டாம் என்று தெலங்காணா உள்துறை அமைச்சர் மொஹம்மது மொஹம்மூது அலி முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பக்ரீத் தொடர்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டிஜிபி மகேந்திர ரெட்டியோடு அமைச்சர் கூட்டம் நிர்வகித்தார். தெலங்காணாவில் அனைத்து மதங்களையும் கௌரவித்து வருகிறோம் என்றும் இதே முறையில் பக்ரீத் கூட நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆகஸ்ட்1ம் தேதி பக்ரீத்தின் போது ஆடு மற்றும் பிறவற்றை பலியிடலாம் என்றும் பசுக்களை ஹிந்துக்கள் பூஜை செய்வதால் பசுவதை செய்யக்கூடாது என்றும் தெலங்காணா உள்துறை அமைச்சர் மொஹம்மது மொஹம்மூது அலி அழைப்பு விடுத்தார். டிஆர்எஸ் அரசாங்கம் தெலங்காணாவில் செக்யூலரிசம் கடைபிடிக்கிறது என்றார்.

நிஜாம் மற்றும் குதுப்ஷாஹி அரசர்களும் செக்யூலரிசம் கடைபிடித்தார்கள் என்று சுட்டிக்காட்டினார். சார்மினாரில் உள்ள நான்கு தூண்களான மினார்களை ஹிந்து, முஸ்லிம்,சீக்கியர், கிறிஸ்டியன் என்று நாம் எண்ணுகிறோம் என்றார். அனைத்து மதங்களையும் குலங்களையும் சமமாக கௌரவிக்க வேண்டும் என்று முகமூது அலி அழைப்பு விடுத்தார்.

கழிவுகளை சாலைகளிலும் வீதிகளிலும் தூக்கி எறிய வேண்டாம். சுகாதாரத்தின் மீது பிரத்யேக கவனம் வகிக்க வேண்டும் என்றார். கொரோனாவை கவனத்தில் கொண்டு சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + ten =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.