தாயை கொலை செய்த மகள்

உலகம் கிரைம் நியூஸ் சற்றுமுன்
mom-daughter-1

ஸ்பெயினில் அனா என்ற பெண்ணும் அவரது மகளான தெறியும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த வீட்டிலிருந்து சமீபகாலமாக தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் அருகில் வசித்து வந்த நபர்கள் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அனா சடலமாக அழுகிய நிலையில் குளியல் தொட்டியில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதமே அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அவரது மகள் தெறி மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தனது தாயை கொலை செய்துவிட்டதாக காதலனிடம் தெறி கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக அனா இப்பகுதியில் வசித்து வந்துள்ளார். அவருடன் மகள் மற்றும் அவரது காதலனும் வசித்து வந்தனர். சில மாதங்களாக அனா காணாமல் போனது குறித்து அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர்

.ஆனால் தனது தாயார் வெளியில் சென்றுள்ளார் சில நாட்களில் திரும்பி வந்துவிடுவார் என கூறி சமாளித்து வந்திருக்கிறார். கைது செய்யப்பட்ட அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.