சதுர்த்தி ஸ்பெஷல்: கோதுமைமாவு கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
wheat-kozukkattai

கோதுமை மாவு கொழுக்கட்டை

தேவையானவை: கோதுமை மாவு – அரை கப், தேங்காய் துருவல். – 2 கப், வெல்லம். – அரை கப், ஏலக்காய்த்தூள். – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய். – தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கி, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசையவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு… தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும். பிசைந்து வைத்த கோதுமை மாவில் சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, பூரணம் கொஞ்சம் வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். சூடான எண்ணெயில் 4, 5 கொழுக்கட்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: ஹோமம் செய்யும் நாளில் இதனை தயாரிப்பது வழக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.