பாசமா செஞ்சு கொடுங்க ராஜ்மா குருமா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
rajma

ராஜ்மா குருமா

தேவையானவை:
ராஜ்மா – 250 கிராம்,
புளிக்கரைசல் – அரை கப்,
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி, வெங்காயம் – தலா 100 கிராம் (நறுக்கவும்), பூண்டு – 6 பல்,
துருவிய தேங்காய் – கால் கப், தனியாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
காய்ந்த மிளகாய் – 3,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை, புதினா தழை – சிறிதளவு,
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
ராஜ்மாவை 6 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து வேகவைத்து, தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண் ணெய் ஊற்றி… சீரகம், காய்ந்த மிள காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இதில் புளிக்கரைசலை ஊற்றி, வெந்த ராஜ்மாவைப் போட்டு, எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் தேங் காயை அரைத்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கரம் மசாலாத்தூள் சேர்த்து, குழம்புப் பதம் வந்ததும் இறக் கவும். கொத்தமல்லித் தழை, புதினா தழை தூவி அலங்கரிக்கவும்.

இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.