வாங்க செய்யலாம்.. சங்கு இனிப்பு பணியாரம்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
chanku-paniyaram

சங்கு இனிப்பு பணியாரம்
தேவையான பொருட்கள்

கோதுமை மாவு -முக்கால் கப்
மைதா மாவு _கால் கப்
ரவை. -2 டேபிள்ஸ்பூன்
உப்பு. -ஒரு சிட்டிகை
நெய். – 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -அரை கப்
ஏலக்காய் பொடி. -கால் டீஸ்பூன்
தண்ணீர் -தேவைக்கேற்ப
எண்ணெய். -பொரிக்க (டீப் ப்ரை)
புதிய சீப்பு. – 1

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு ,ரவை, உப்பு மற்றும் நெய் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

இதை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
பின் மாவை சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
ஒரு புதிய சீப்பை எடுத்து அதில் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து தேய்த்து சுருட்டவும். அது சங்கு வடிவில் வரும் .
அதே போல் அனைத்தையும் செய்து கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
வேறொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ரெட்டை கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்

அதில் பொரித்த பணியாரத்தை போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்
சங்கு இனிப்புப் பணியாரம் தயார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.