ஹாங்காங்: பெற்றோரை சமைத்து உண்ட நபருக்கு ஆயுள் சிறை

உலகம்

hong-kong-man-who-salted-and-cooked-parents-jailed-for-life ஹாங்காங்: பெற்றோரை சமைத்து உண்ட ஹாங்காங்கைச் சேர்ந்த நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஹாங்காங்கைச் சேர்ந்தவர் ஹென்றி ச்சா(31). இவர் தன் பெற்றோறைக் காணவில்லை என போலீசில் புகார் செய்தார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் முதலில் அவர்கள் சீனா சென்றனர் என்றும், பின்னர் அங்கு அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் கொல்லப்பட்டதாக நண்பர் ஒருவர் மூலமாக தெரியவந்ததாகவும் கூறினார். முன்னுக்குப் பின் முரணாக பல்வேறு தகவல்களைக் கூறிக் குழப்பிய ஹென்றி ச்சாவின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 2013ம் ஆண்டே பெற்றோரை ஹென்றி கொலை செய்ததும், தாய், தந்தையின் தலைகளை வீட்டில் 2 பிரிட்ஜ்களில் அடைத்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற உடற்பகுதிகள் சமைக்கப்பட்டு, லஞ்ச் பாக்ஸ்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹென்றியும் அவர் நண்பரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹென்றி ச்சாவ்வுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்தார். இருவித குற்றங்களுக்காக, சாவ்வுக்கு மேலும் 9 ஆண்டு 4 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குற்ற வழக்கில் இருந்து அவரது நண்பர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, ஹென்றி சாவ் ஒரு மனநோயாளி என்று சில இடங்களில் இனங்காணப்பட்டார். அவ்வாறு அவர் தன்னையே கூறிக் கொண்டதும் குறிப்பிடத் தக்கது. தன் வாழ்க்கையில் நடந்த துயரச் சம்பவங்களைக் குறிப்பிட்டு, தனது இளைய வயது முதல், நடுத்தர வயது வரை தனக்கு ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்பட்டது என்று கூறிய சாவ், தானே தன் பெற்றோரை சாகடித்து, அவர்களை காணாமல் போனவர்களாக போலீஸை நம்பவைத்து, அவர்களின் உடல்களை துண்டு துண்டாக நறுக்கியதை ஒப்புக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.