துபை இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்லுமா என்று சச்சினிடம் கேள்வி கேட்கப் பட்டது. ஏற்கெனவே உலகக் கோப்பை குறித்த சச்சினின் வீடியோ ஒன்று இணையத்தில் யுடியூபில் உலா வருகிறது. இந்நிலையில், யுஏஇ.யின் அபு தாபியில் 150வது ஏச்டர் பார்மஸியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, சச்சின் மீது இந்தக் கோப்பையை இந்தியா தக்கவைத்துக் கொள்ளுமா என்ற கேள்வியைக் கேட்டு ஒரு பவுன்சர் வீசப்பட்டது. நான் இந்த உலகக் கோப்பையின் ஐசிசி கிரிக்கெட் தூதுவராக உள்ளேன். அதனால், இந்தக் குறிப்பிட்ட அணிதான் வரும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால், நடப்பு சாம்பியன்கள் நடப்பு சாம்பியன்களாகத் தொடரவே உள்ளனர் என்றார். https://youtu.be/4NAWQbDohbk https://www.youtube.com/watch?v=bBvrZLD0frA
