காதலிக்கு காதலர் தின பரிசளித்த காதலன்! கம்பி எண்ண வைத்த சம்பவம்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
gift-1
gift-1

இளைஞர்கள் தங்களின் காதலிக்கு பல்வேறு விதமான பரிசுகளை வழங்கி மகிழ்ச்சிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் துபாயில் வசித்து வரும் இளைஞர் ஒருவரின் காதலியின் பிறந்த நாளுக்கு குடுத்த பரிசு வைரலாகி வருகிறது.

தனது காதலிக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை அவரின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸாக கொடுக்க வேண்டும் என்று அந்த இளைஞர் முடிவு செய்துள்ளார்.

அப்போது அந்த பகுதியில் இருக்கும் ஒட்டகங்கள் இருந்த பண்ணைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ஒட்டக குட்டி ஒன்றை பண்ணையின் உரிமையாளருக்குத் தெரியாமல் எடுத்து வந்துள்ளார். பின்பு அந்த குட்டியை அவரின் காதலிக்குக் பிறந்த நாள் பரிசாக கொடுத்தார்.

camel-1
camel-1

இளைஞரின் பரிசை பார்த்து அவரின் காதலி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அவர் இந்த ஒட்டக குட்டி எப்படி வந்தது என்பதை பற்றி அவர் எதுவும் கேட்கவில்லை.

இந்நிலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒட்டகம் ஒன்றின் குட்டி காணாமல் போனதைப் பார்த்து ஒட்டக பண்ணையின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவர் போலீசில் புகார் தெரிவித்தார். ஒட்டக பண்ணையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காணாமல் போன ஒட்டக குட்டி உள்ளூர் செய்தி சேனல்களில் தலைப்பு செய்தியானது. இதைப் பார்த்த அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் பயந்து போன அந்த இளைஞர் பரிசாக கொடுத்த ஒட்டக குட்டியை காதலியிடம் இருந்து வாங்கி திருடிய பண்ணையின் வாசலின் முன்பு விட்டார்.

பின்னர் அவரே போலீசுக்கு போன் செய்து பண்ணையின் வாசலில் ஒட்டக குட்டி ஒன்று நிற்பதாகக் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த இளைஞரை விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். அப்போது அவர் நடந்த அனைத்தையும் ஒப்புகொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஒட்டக குட்டியைத் திருடிய இளைஞரையும், திருடிய ஒட்டகத்தைப் பரிசாகப் பெற்ற காதலியையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.