ஹிட்டாகும் ‘வாங்க மோடி’ … பாடல்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
modi 1 - 2026

பிரதமர் மோடி மக்கள் நலத்திட்டப் பணிகளை அறிவிக்கவும் தொடங்கி வைக்கவும் கோவை வரும் நிலையில், இதையே தேர்தல் பிரசாரத்துக்கான உத்தியாக அவரை வரவேற்று கொங்குத் தமிழில் பாடல் ஒன்றை பாஜக., வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இன்று கோவை கொடீசியாவில் நடைபெறும் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.

இந்நிலையில் கோவை வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக ‘வாங்க மோடி.. வணக்கங்க மோடி’ என்ற கொங்கு தமிழில் ஒரு பாடலை பாஜகவினர் பாடி இசையமைத்து வெளியிட்டுள்ளனர். இதில் பாஜக.,வின் வானதி சீனிவாசனும் பாடியுள்ளார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பாடலும் தமிழ்நாடு வெல்கம்ஸ் மோடி என்ற ஹேஸ்டாக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.