சாப்பிட்ட தட்டுகளை சாக்கடை நீரில் கழுவி… உவ்வே… வீடியோ வைரல்!

அடடே... அப்படியா? துணுக்குகள் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
plates cleaning in ditch water - 2026
  • சாக்கடை நீரில் தட்டுகளைக் கழுவும் தள்ளுவண்டி உணவு வியாபாரி.
  • வீடியோவை பார்த்தால் வாய் பிளக்க வேண்டியதுதான்.

அண்மையில் எச்சிலைத் துப்பி பரோட்டாக்களை செய்த வீடியோ ஒன்று வைரல் ஆகியது. அதற்கு முன்பு பானிபூரியை சாக்கடை நீர் ஊற்றி வியாபாரம் செய்ததாக ஒரு வீடியோ வைரல் ஆனது. கையும் களவுமாக கண்டுபிடிக்கப்பட்ட வியாபாரி தொடர்பான வீடியோ நெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது அப்படிப்பட்ட ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. இந்த வீடியோ பழையதாக இருந்தாலும் மறுமுறை நெட் உலகில் சுற்றிவருகிறது. இதனை பார்த்த பின்னாவது நாம் கட்டாயம் எச்சரிக்கையாக இருப்போம் என்று எதிர்பார்க்கலாம்.

கொரோனா நேரத்தில் இந்த மனிதர் செய்யும் பணியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…

அசுத்தமான சுற்றுச்சூழல் நோயை பெருக்கும் என்று மருத்துவர்கள் ஓயாமல் கூறிவருகிறார்கள். சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.

ஆனால் இங்கு இந்த வீடியோவில் உள்ளவர் தட்டுகளை சாக்கடை நீரில் கழுவி மக்களின் உயிரோடு விளையாடுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த பிறகாவது சாலையோர வண்டிகளில் விற்கும் பொருட்களை வாங்கித் தின்பவர்கள் கட்டாயம் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள்.

இந்த வீடியோவை ஒருவர் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் சமூகவலைதளத்தில் பதிவு செய்தார். குறைந்தளவு நேரத்திலேயே வைரலாக மாறி இதுவரை இந்த வீடியோவை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளார்கள். காமென்ட்களால் நிரப்பியுள்ளார்கள். இதோ இந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.