அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! குடல்புண்., சர்க்கரை வியாதி!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips 1
health tips 1

குடல் புண்ணுக்கு…

குடல் புண்ணுக்கு முட்டைக்கோஸ் மிகவும் உகந்தது. முட்டைக்கோசை வேகவைத்து. அதன் நீரில் சிறிது மிளகை தட்டிப்போட்டு சூப்பாக சாப்பிட குடல் புண் குணமாகும்.

*பச்சை மஞ்சளை பசுமையாய் அரைத்து சிறிதளவு சில நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய் குழந்தை பிறந்த பின்பு வரும் வலி, குதகம் போன்ற நோய்கள் வராது. மேனிக்கும் பளபளப்பு உண்டாகும்.

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர இரண்டொரு தினங்களில் குடல் புண், குடல் நோய் குணமாகும்.

குடல் புண், வாய்ப்புண், தொண்டைப் புண் எதுவானாலும் சரி, அத்தி மரத்தின் பட்டையை நன்றாக இடித்து சாறெடுத்து இரண்டு அவுன்ஸ் சாற்றுடன், இரண்டு அவுன்ஸ் பசும்பாலைக் கலந்து கற்கண்டு போட்டுச் சாப்பிட புண்கள் குணமாகி விடும்.

குடலில் புண் இருந்தாலும், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் புங்க இலையை சுத்தம் செய்து கசக்கி சாறெடுத்து காலை, மாலை சிறிதளவு சாப்பிட்டு வர குணமாகும்.

அடிக்கடி உலர்ந்த திராட்சையை வாயில் போட்டுக் கொள்ள குடல் வறட்சியை குணப்படுத்தி அடிக்கடி தாகம் ஏற்படுவதைக் குறைக்கும். தேங்காயோ அல்லது தேங்காய்ப்பாலோ சாப்பிட குடல் புண் குணமாகும்.

கொசுக்களை விரட்ட

நொச்சி இலைகளை நெருப்பில் போட்டுப் புகையை ஏற்படுத்தினால் கொசுக்கள் ஓடியே போய்விடும்.

உலர்ந்த மாம்பூவைத் தூளாக்கி நெருப்பிலிட்டுத் தூபம் போட கொசுக்கள் பறந்தே போய்விடும்.

கொதிநீரைக் கொட்டிக் கொண்டால்…

தண்ணீரில் உப்பைக் கரைத்து அதை ஒரு துணியில் நனைத்தெடுத்து கொதி நீர் பட்ட இடத்தில் ஒத்தி எடுக்க எரிச்சலும் குறையும். கொப்புளமும் வராது.

கொக்கிப் புழுக்களுக்கு…

பச்சை மஞ்சள் சாற்றைக் குழந்தைகளுக்கு அரை அல்லது ஒரு தேக் கரண்டி வரை பாலில் கவந்து இரண்டு மூன்று நாள்கள் இரவு நேரங்களில் மட்டும் கொடுத்து வந்தால் கொக்கிப் புழுக்கள் மாண்டு மலத்தோடு கழிந்து விடும்.

சர்க்கரை வியாதிக்கு…

முந்திரி மர வேர்ப்பட்டை 30 கிராம் எடுத்து இடித்து மண் சட்டியி விட்டு 2 விட்டர் நீர் விட்டுக் காய்ச்சி அரை விட்டராகச் சுண்ட வைத்து காலை மாலை தவறாமல் நாற்பது நாள்கள் குடித்து வர சர்க்கரை வியாதி விலகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.