அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! சிறுநீர் பிரச்சினை!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips 1
health tips 1

குழந்தைக்கு உரிய வயது வந்தும் சரியாகப் பேச்சு வரவில்லையா?

சுத்தமான தேனை இரவு முழுவதும் பனியில் வைத்து எடுத்து அதிகாலையில் குழந்தையின் நாக்கில் தாராளமாகத் தடவி வர சீக்கிரத்தில் குழந்தை நன்றாகப் பேசத் தொடங்கி விடும்.

சிலந்தி கடிக்கு…

ஆடா தொடை இலையைப் பச்சை மஞ்சளுடன் சம எடை மிளகு சேர்த்தரைத்து கடித்த இடத்தில் வைத்துக்கட்ட விஷமிறங்கும்.

சிறுநீர் கோளாறுக்கு…

  • எலுமிச்சம்பழச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து உள்ளுக்குச் சாப்பிட இரண்டொரு வேளையிலேயே நீர்க்கடுப்பு நீங்கி விடும்.

வாழைத் தண்டை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர சிறுநீர் கோளாறுகள் குணமாகும்.

கருவேலின் கொழுந்தின் சாற்றில் தண்ணீர் விட்டுக் காய்ச்சி சர்க்கரையுடன் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட இருமல். நீர்ச்சுருக்கு, வெள்ளை முதலான வியாதிகள் குணமாகும்.

10 சண்பகப்பூவை 100 மி.லி. தண்ணீர் விட்டுக் கொதிக்கக் காய்ச்சி குடித்து வர வெட்டை, மேக நோய்கள் கணைச்சூடு, நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, சொட்டு மூத்திரம் ஆகியவை இரண்டொரு நாள்களில் குணமாகும்.

சிறுநீர் கடுப்புக்கு…

ஒரு தோலா முள் இலவு இலையைப் பறித்து அரைத்துப் பாலோடு சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர நீர் தாராளமாக இறங்கும்.

உடல் உஷ்ணம் அதிகமாகி சிறுநீர் தாராளமாக இறங்காமல் வலி ஏற்படும் சமயங்களில் கண்டங்கத்திரி இலைச்சாற்றோடு சம அளவு தேன் கலந்து – அரை அவுன்ஸ் ஒரு வேளை கொடுக்க நல்ல குணம் தெரியும்.

கல்யாண முருங்கையின் இலைச் சாறு சிறுநீர் எரிச்சலைப் போக்கி தாராளமாய் நீர் இறங்கச் செய்யும். காலை, மாலை வேளைகளில் ஓர் அவுன்ஸ் வீதம் அருந்தி வர நீண்டகால நீர்ச்சுருக்கு. நீர் எரிச்சல் வியாதிகள் நீங்கும். பெண் மலட்டுத் தன்மையும் மாறும்.

உடல் உஷ்ணத்தால் நீர்க்கடுப்பு ஏற்பட்டால் நிறைய மோர் சாப்பிடலாம். அதில் எலுமிச்சம் பழச்சாற்றை விட்டுச் சாப்பிட நீர்க்கடுப்பு போய்விடும்.

மூத்திரக் கோளாறுகள் ஏதேனும் இருந்தால் உலர்ந்த திராட்சைப் பழங்களை இரண்டாய் பிளந்து இரவே நீரில் ஊறப் போட்டு, காலையில் பிசைந்து எடுத்து அந்த நீரில் நெல்லிக்காய் ரசத்தைக் கலந்து சாப்பிட்டு வந்தால், குணமாகி விடும்.

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், மூத்திரம் கழிக்க சிரமமேற்படும். அடைப்பு ஏற்படும். இந்தக் கற்களை கரைக்க ஓமத்தைக் கஷாயம் வைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வாருங்கள். சில நாள்களில் அந்தக் கற்கள் கரைந்து விடும்.

சிறுநீர்த் தாரையில் எரிச்சலா?

சிறுநீர்த் தாரையில் எரிச்சலோ வலியோ ரணமோ உண்டாகியிருந்தால் நித்திய கல்யாணிப்பூ, நெருஞ்சில் சமூலம் இரண்டும் சம எடை எடுத்து கஷாயம் வைத்து சர்க்கரையும் பாலும் சேர்த்து காலையில் மட்டும் இருபது தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட்டு வர குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.