spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ஆறு கால பூஜைக்கு வழியில்லே... அண்ணாத்த... ஏழு நேர வசூலுக்கு ரெடி! ஏழரை விடியல்!

ஆறு கால பூஜைக்கு வழியில்லே… அண்ணாத்த… ஏழு நேர வசூலுக்கு ரெடி! ஏழரை விடியல்!

- Advertisement -
annatha1
annatha1

திருச்செந்தூர் முருகன் சூரசம்ஹாரத்தன்று மக்கள் பங்கேற்க தடை… ஆனால் அண்ணாத்தே படம் பார்க்க A/C தியேட்டர் உட்பட அனைத்து திரை அரங்குகள் அனைத்திலும் 100% மக்கள் அனுமதி…

திறந்தவெளி கோவிலில் மக்கள் கூடினால் வரும் தொற்று,
அனைத்து கதவுகளையும் மூடிக்கொண்டு மணிக் கணக்கில் இருக்கும் AC தியேட்டர்களில் பரவாதாம்… என்ன logic இது?

இப்படியான கருத்துகள் சமூகத் தளங்களில் கேட்கப்பட்டு கொண்டிருக்கின்றன… கொரோனா என்ற ஒற்றைச் சொல்லை முன்வைத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்து மதம் ஆலயங்கள் மற்றும் இந்து மதம் தொடர்பான விழாக்களுக்கு மட்டும் விதித்துக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது…

திருநெல்வேலியில் புகழ்பெற்ற அன்னை காந்திமதியம்மன் நெல்லையப்பர் ஐப்பசி திருக்கல்யாண உற்சவம் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுவதையும் அறநிலைய துறை தடை செய்திருக்கிறது.. இதுவும் நெல்லையில் பக்தர்களுக்கு பெரும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது… இதுகுறித்து சமூக தளங்களில் கேள்விகளை எழுப்பி வரும் மக்கள் திமுக குடும்பத்தின் சன் பிக்சர்ஸ் தயாரித்து திமுக வாரிசு உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான ரெட் ஜெயிண்ட் விநியோகிக்கும் அண்ணாத்த படத்துக்கு தியேட்டரை நிரப்பலாம் ஆனால் காந்திமதி நெல்லையப்பர் ஐப்பசி திருக்கல்யாணத்திற்கு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் நிரப்ப தடை விதிப்பதா அறநிலையத்துறை செயல் அலுவலர் காந்திமதி உத்தரவு போடுவதா என்று கோபத்துடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்

ஐப்பசி திருக்கல்யாணம் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற அனுமதிக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று நெல்லை மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

hindumunnani annathe protest
பரவிக் கொண்டிருக்கின்றன

இது இப்படி இருக்க… ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ட்ரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் – தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. முன்னதாக அண்ணத்த படத்தில் இடம்பெற்றுள்ள, ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரல் காற்றே’, ’மருதாணி’, ‘வா சாமி’ ஆகிய பாடல்களும், படத்தின் டீசரும் வெளியானது.

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி, ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் ட்ரைலர் வெளியானது. படம் தீபாவளியை முன்னிட்டு, வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.

‘அண்ணாத்த’ படத்துக்கு தியேட்டர்களின் பகல்-இரவு கொள்ளை

24 மணி நேரம் உள்ள ஒரு நாளில், நாளுக்கு ஏழு நேர காட்சிகள் என அண்ணாத்த படத்துக்கு தியேட்டர்கள் தயாராகி வருகின்றன. ஒரு படம் 3 மணி நேரம் ஓடும் என்றால், ஒரு நாளில் அதுவே 21 மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும். மக்கள் வந்து அமரவும், எழுந்து செல்லவும் பத்து பத்து நிமிடங்கள் ஒதுக்கி, நாள் முழுதும் இடைவிடாமல் தியேட்டர்களில் அண்ணாத்தய ஓட்டப் போகிறார்களாம்..

அண்ணாத்த படத்தின் ஏழு நேரக் காட்சிகள் விவரம் இதுதான்…

Annaatthe show timing
Early morning – 4 am
Spl Show – 8 am
Noon – 12pm
Matinee – 4 pm
Evening – 7 pm
Night – 10 pm
Midnight – 12am

அண்ணாத்த படத்துக்கு காலை நேரத்தில் இருந்து உள்ள காட்சிகளில், டிக்கெட் பதிவு கட்டணம், சிறிய பாப்கார்ன் பாக்கெட், சிறிய கோக் உடன் ஒரு டிக்கெட் கட்டணம் ரூ.580 என்றும், அதிகாலை நேர காட்சிக்கு டிக்கெட் புக்கிங் கட்டணம், வழக்கமான பாப்கார்ன், கோக் உடன் ஒரு டிக்கெட் கட்டணம் ரூ.850 என்றும் அதிகாரபூர்வமாக தெரிந்து விற்பனை செய்யப் படுகிறது.

இதற்காக டிக்கெட் புக் செய்வதற்கு என்று, படிவம் போன்ற விவரமும் கேட்கப் படுகிறது. அதில், பெயர், டிக்கெட்கள், இடம், தேதி, காட்சி நேரம் என நிரப்பி அனுப்ப வேண்டுமாம்…

Send bookings In this format pls.
Name –
Tickets –
Venue –
Date –
Show time –

கொரோனா கெடுபிடிகளுக்கு மத்தியில் கொரோனா அதிகமாகப் பரவிய சூழ்நிலையில் இருமுறை ஒத்திவைக்கப்பட்டு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்தார்கள்… படப்பிடிப்பே கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் படத்தை நெருக்கியடித்து பார்ப்பவர்களுக்கு மட்டும் கொரோனா பரவாது என்பது என்ன நிச்சயம்?! கோயில்களில் பரவும் என்றால் திரையரங்குகளில் மட்டும் என்ன கொரோனா செத்துப் போகவா செய்யும்?! அண்ணாத்த சினிமாவைத்தான் லாஜிக் இல்லாமல் தயாரித்திருக்கிறார்கள் என்றால் நிஜத்திலும் கூட விடியாமூஞ்சி அரசின் உத்தரவுகளுக்கு லாஜிக் இல்லையே என்று விமர்சிக்கிறார்கள் இணையதள வாசிகள்!

ஆக.. ஆக… ஏழரையைப் பெருக்கும் விடியல் அரசில், ஏழு நேரக் காட்சிகளுடன் தியேட்டர்கள் களைகட்ட போகிறது ஆனால் ஆறு கால பூஜைக்கு வழியின்றி தமிழகத்தின் கோயில்களில் தெய்வங்கள் திண்டாடுகின்றன…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe