ஆரோக்கிய சமையல்: அவல் – ஸ்பிரவுட் உப்புமா!

Published:

Aval Sprout uppuma
Aval Sprout uppuma

அவல் – ஸ்பிரவுட் உப்புமா

தேவையானவை:
அவல் – ஒரு கப்,
முளைவிட்ட பச்சைப்பயறு – கால் கப், மஞ்சள்தூள் – சிறிதளவு,
தேங்காய்த் துருவல் – அரை கப்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
கடுகு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
புளி – நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:
கரைத்த புளித்தண்ணீரில் அவலை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும், பின் வெங்காயம் சேர்த்து வதக்கி, புளிக்கரைசலில் ஊறிய அவலை (தண்ணீரை வடித்துவிட்டு) சேர்த்துக் கிளறவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், முளைவிட்ட பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். பிறகு எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறி இறக்கி பரிமாறவும். எளிதில் ஜீரணமாகக்கூடிய சுவையான உப்புமா இது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img