ஸ்பெஷல் டேஸ்ட் ஸ்பிரிங் ஆனியன் குல்ச்சா!

Published:

Spring Onion Kulcha
Spring Onion Kulcha

ஸ்பிரிங் ஆனியன் குல்ச்சா

தேவையானவை:
மைதா – ஒரு கப்,
பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத்தாள்) – கால் கப்,
சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
ஃப்ரெஷ் ஈஸ்ட் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். இதனை ஈரத்துணியால் 15 நிமிடம் மூடிவைக்கவும். பிறகு, மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்து பரிமாறவும். தயிரில் சாட் மசாலாத்தூள் தூவி தொட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: ஃப்ரெஷ் ஈஸ்ட் கிடைக்க வில்லையென்றால், உலர்ந்த ஈஸ்ட்டை வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்து ஈஸ்ட் கரைந்ததும் அதை மாவில் ஊற்றி பிசைய வேண்டும்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

Related articles

Recent articles

spot_img